தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்ட டம்ளர்கள் திருட்டு.. மது அருந்த போலீஸே திருடியது அம்பலம்.. வைரல் வீடியோ
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் டம்ளர் திருடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ளது மேற்பனைக்காடு. இங்கு கோடை காலத்தை முன்னிட்டு அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து தண்ணீர் பந்தலை வைத்துள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்ட இந்த தண்ணீர் பந்தலில் தண்ணீர், மோர், சர்பத் ஆகியவற்றை சிறிய டம்ளர் மூலம் மக்களுக்கு வழங்கி வந்தனர்.

அதிர்ச்சி
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் தண்ணீர் பந்தலில் வைக்கும் டம்ளர்கள் காணாமல் போனது. இதனால் இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிசிடிவி கேமரா
திருடுபவர்கள் மீது ஆதாரப்பூர்வமாக போலீஸில் புகார் அளிக்க அவர்கள் முடிவு செய்தனர். இதற்காக தண்ணீர் பந்தலுக்கு நேராக நேற்று முன் தினம் ஒரு சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளனர்.

இளைஞர்கள் அதிர்ச்சி
இதையடுத்து நேற்று காலை தண்ணீர் பந்தலுக்கு வந்த போது டம்ளர்கள் மீண்டும் காணவில்லை. இதையடுத்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

டம்ளர் திருடம் போலீஸார்
அந்த டம்ளர்களை மதுகுடிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸாரே திருடியது தெரியவந்தது. இருவரில் கீரமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஐயப்பன் என்பதும், ஊர்க்காவல் படையை சேர்ந்த வீரர் வடிவழகன் என்பதும் தெரியவந்தது.
|
டம்ளர்கள்
இதுகுறித்து உயரதிகாரிகளிடம் வீடியோவுடன் புகார் அளிக்கவுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்தனர். யாராவது திருடினால் அதை போலீஸில் புகார் அளிக்கலாம். ஆனால் இங்கு போலீஸே அதுவும் 50 ரூபாய் மதிப்புள்ள டம்ளர்களை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications