Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலினை பார்க்க சென்றபோது சோகம்.. கண்ணீர் செய்தியைக் கேட்டு உடனடி ஆக்‌ஷன் எடுத்த கலெக்டர்!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளிக்க வந்த கைம்பெண் கூட்ட நெரிசலில் தள்ளிவிடப்பட்டதால் அவரால் முதல்வரிடம் தனது கோரிக்கை மனுவை அளிக்க முடியவில்லை.

கொரோனாவால் கணவனை இழந்த அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் கண்ணீர் விட்டு அழுது தனது வேதனையைத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அறிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அப்பெண்ணை அழைத்துப் பேசி, அவருக்கு வேலையும், அவரது தாயாருக்கு மாதாந்திர ஓய்வூதியத்தையும் உறுதி செய்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்

முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம் காரையூரில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர், புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு 81.13 கோடி மதிப்பிலான 138 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டையில் ஸ்டாலின்

புதுக்கோட்டையில் ஸ்டாலின்

புதுக்கோட்டை வந்த முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுப்பதற்காக ரோஜா இல்லம் முன்பு கோரிக்கை மனுவோடு சோலைமலர் என்ற பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் காத்திருந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அங்கு வந்தபோது கூட்ட நெரிசலில் பாதுகாவலர்கள் அப்பெண்ணை கீழே தள்ளியுள்ளனர். இதனால் அவரால் கோரிக்கை மனுவைக் கொடுக்க முடியவில்லை. இதனை கவனித்த பாதுகாவலர் ஒருவர் சோலைமலரையும், இரண்டு குழந்தைகளையும் தூக்கி விட்டுள்ளார்.

கண்ணீர் விட்ட பெண்

கண்ணீர் விட்ட பெண்

சோலைமலர் தனது கோரிக்கை மனுவை முதல்வரிடம் கொடுக்க முடியாமல் போனதால் கலங்கியுள்ளார். அங்கிருந்த செய்தியாளர் ஒருவரிடம் தனது வேதனையைத் தெரிவித்துள்ளார். அப்போது, எனது கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். எனக்கு தந்தையும் இல்லை, சகோதரர்களும் இல்லை. இரண்டு குழந்தைகளுடன் வருமானமின்றி, தங்கை ஆதரவுடன் வாழ்ந்து வருகிறேன். நான் ஒரு இளம் பட்டதாரி. எனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனக் கோரி முதலமைச்சரை சந்திக்க வந்தேன். இரு குழந்தைகளுடன் வந்த என்னை பாதுகாவலர்கள் பிடித்து கீழே தள்ளிவிட்டனர்" என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

மாவட்ட கலெக்டர்

மாவட்ட கலெக்டர்

இந்தச் சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து உடனே சோலைமலரை நேரில் அழைத்து அவரது கோரிக்கையைக் கேட்டறிந்துள்ளார். பிறகு உடனடியாக சோலைமலருக்கு தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியர் வேலையை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார். மேலும் அப்பெண்ணின் தாய்க்கு மாத ஓய்வூதியத்தையும் உறுதி செய்துள்ளார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

பொதுமக்கள் பாராட்டு

பொதுமக்கள் பாராட்டு

முதல்வரை சந்தித்து மனு அளிக்க வந்த கைம்பெண் பாதுகாவலர்களால் நெரிசலில் தள்ளிவிடப்பட்டு, முதல்வரை சந்திக்க முடியாமல் போன நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் இந்த துரித நடவடிக்கையை புதுக்கோட்டை மக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+