ஆசனவாய் வழியாக பாட்டில்.. புதுக்கோட்டையே ஆடிப்போச்சு.. அரசு மருத்துவர்கள் செய்த சூப்பர் சம்பவம்
புதுக்கோட்டை: தீராத வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது வயிற்றில் குளிர்பான பாட்டில் இருந்தது மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் சுமார் 45 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட, பேச்சு திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளி ஒருவர் தீராத வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் ஆசனவாயிலிருந்து ரத்தம் தொடர்ந்து வேளியேறி வந்தது. இதனையடுத்து இவரது வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது வயிற்றில் முழு குளிர்பான பாட்டில் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இதை பார்த்து அதிர்ந்துபோன மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இந்த சிகிச்சைக்கு மாற்றுத்திறனாளி நோயாளியை தயார்ப்படுத்த மிகவும் சிரமப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் ஒருவழியாக இவரை மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு தயார்ப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து சுமார் 2 மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து முழு பாட்டிலையும் மருத்துவர்கள் வெளியில் எடுத்துள்ளனர். இருப்பினும் மாற்றுத்திறனாளியின் குடல் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மற்றொரு அறுவை சிகிச்சை மூலம் இந்த பிரச்னையும் சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது மாற்றுத்திறனாளியான இவரது உடலுக்குள் வேறு யாரேனும் பாட்டிலை நுழைத்தார்களா? அல்லது இவரே இது போன்ற செயலில் ஈடுபட்டாரா என்கிற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட தகவலின்படி மாற்றுத்திறனாளி நபரே தனது ஆசனவாய் வழியாக பாட்டிலை நுழைத்துக்கொண்டார் என்பது தெரியவந்திருக்கிறது. இருப்பினும் இதன் உண்மை தன்மையை காவல்துறையினர் சோதித்து வருகின்றனர்.
துப்பாக்கி படத்தில் வருவதை போல மனித உடலுக்குள் பாட்டிலை நுழைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே கர்பப்பை கட்டி, ரத்தக்கட்டி போன்ற சிக்கலான பிரச்னைகளை புதுக்கோட்டை மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து சாதித்துள்ளனர். அந்த வகையில் தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட, மாற்றுத்திறனாளி நபரின் உடலிலிருந்து முழு குளிர்பான பாட்டிலை அகற்றி மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications