அந்த மனசு தான் சார் கடவுள்! இலங்கை மக்களுக்கு உதவ ‘டீ’ மொய்விருந்து..! புதுக்கோட்டை இளைஞரின் முயற்சி
புதுக்கோட்டை : பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் புதுக்கோட்டையை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ஒருவர் டீ மொய்விருந்து வைத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் கலாச்சாரம் சார்ந்த விழாவாக கருதப்படும் கோடிகள் குவியும் மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முதன் முதலில் தொடங்கப்பட்டதுதான் மொய்விருந்து விழாக்கள்.
அது மெல்ல மெல்ல வளர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளிலும் பரவி, தற்போது இந்த மொய் விருந்து விழாக்கள் இந்த பகுதி மக்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாகவும் மாறிப்போனது.

புதுக்கோட்டை மொய்விருந்து
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் முதன்முதலாக தொடங்கும் மொய் விருந்து விழா, அதனை சுற்றிய பகுதிகளான அணவயல், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு சேந்தன்குடி குளமங்கலம் என தொடர்ந்து அடுத்தடுத்த ஊர்களில் வரும் ஆடி மற்றும் ஆவணி மாதங்கள் வரை நடைபெறும். மொய் விருந்து விழாவிற்கு வருபவர்களை விழா நடத்துபவர்கள் அன்போடு மாலை அணிவித்து வரவேற்பதோடு அவர்களுக்கு ஆட்டு கறி விருந்தும் பரிமாறப்படுகிறது.

டீ மொய் விருந்து
மேலும் மொய்விருந்துக்கு பெயர் போன புதுக்கோட்டை மாவட்டத்தில் கணினி மூலம் பணம் வசூலிக்கும் முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக டீக்கடை உரிமையாளர் ஒருவர் டீ மொய் விருந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இலங்கைக்கு உதவி
.அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் அவர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அடங்கிய முதல் கப்பல் இலங்கை சென்றுள்ளது. மேலும் நல்லுள்ளம் படைத்தவர்களின் உதவி வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்ததை அடுத்து பல்வேறு தரப்பிலும் தங்களால் முடிந்த நிதி உதவியை அளித்து வருகின்றனர்.

கடையில் உண்டியல்
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பகவான் டீக்கடை என்ற பெயரில் டீக்கடை நடத்திவரும் சிவக்குமார், டி மொய் விருந்து நடத்தி உள்ளார். அவரது கடையில் டீ குடித்து விட்டு அங்கே வைக்கப்பட்டிருக்கும் பெரிய உண்டியலில் தங்களால் இயன்ற அளவு நிதி அளித்தால் அதனை இலங்கை மக்களுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார்.

இளைஞருக்கு பாராட்டு
இவரது செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பாராட்டுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல கொரோனா காலத்தில் கடையின் உரிமையாளர் சிவக்குமார் தன்னால் முடிந்த உதவியாக தனது கடையில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த டீ கடன்களை தள்ளுபடி செய்ததோடு,கஜா புயல் காலத்திலும் இதே போல மொய் விருந்து நடத்தி உதவியது குறிப்பிடத்தக்கது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications