ஜல்லிக்கட்டு திடீர் ஒத்திவைப்பு.. நள்ளிரவில் மறியலில் ஈடுபட்ட தச்சங்குறிச்சி மக்கள்! போலீஸ் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதிக்குட்பட்ட தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அனுமதி மறுத்திருந்த நிலையில், போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டு தோறும் புத்தாண்டு அன்று தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இது நாளடைவில் ஜனவரி 2ம் தேதியன்று நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி அதாவது இன்று போட்டி நடைபெற இருந்தது. இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இது என்பதால் மாவட்டம் முழுவதும் மக்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். அதேபோல தமிழ்நாடு அரசும் போட்டி நடத்துவதற்கான அரசாணையை வெளியிட்டது.

வழக்கமாக போட்டி ஜனவரி 2ம் தேதியன்று நடைபெறும். ஆனால் விழா கமிட்டியினர் போட்டிக்கு உரிய அனுமதியை முன்கூட்டியே கோரவில்லை. எனவே மாவட்ட நிர்வாகமும் அனுமதியளிக்கவில்லை. இதனால்தான் போட்டி 2ம் தேதியிலிருந்து 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னரே அரசு அரசாணையை வெளியிட்டது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் புதுக்கோட்டை மாவட்டம்தான் ஜல்லிக்கட்டு பொட்டியில் டாப். ஏனெனில் இங்குதான் மற்ற மாவட்டங்களைவிட அதிகமான அளவில் வாடிவாசல்கள் இருக்கின்றன.

முன்பதிவு

முன்பதிவு

அதிகமான அளவு வாடிவாசல் கொண்ட மாவட்டம், ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு நடத்தும் மாவட்டம் என்கிற பெருமையை புதுக்கோட்டை கொண்டிருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாடிவாசலை சரி செய்து, பார்வையாளர்கள் அமர்வதற்கான இடம், மாடு பிடி வீரர்கள் காயமடையாமல் இருப்பதற்கு வைக்கோல் கொண்டு நிரப்பப்பட்ட வாடி வாசல் பாதை என எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்தது. பின்னர், மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியது. பலரும் ஆர்வமாக தங்களது பெயரை பதிவு செய்து போட்டிக்காக காத்திருந்தனர்.

 அனுமதி மறுப்பு

அனுமதி மறுப்பு

இந்நிலையில்தான், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்பி வந்திதா பாண்டே மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் போட்டி நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர். பின்னர் போட்டிக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி செய்யப்படவில்லை என்று கூறி அனுமதி மறுக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்தார். இது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. போட்டி இன்று நடைபெறும் என்று நேற்றே வெளியூரிலிருந்து மாடுபிடி வீரர்கள் தச்சங்குறிச்சிக்கு வந்து சேர்ந்திருந்தனர். ஆனால் ஆட்சியர் அனுமதி வழங்காததை சற்றும் எதிர்பார்க்காத இவர்கள் கடும் கோபமடைந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஆட்சியர் அனுமதி மறுத்ததற்கான காரணத்தை அவர்களுக்கு விளக்கினர். அதாவது, வாடி வாசலிலிருந்து காளைகள் வெளிவரும் கலெக்ஷன் பாயிண்ட் சரியாக அமைக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினர். மேலும், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு ஆன்லைன் முறையில் டோக்கன் வழங்காதது, மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை ஆர்டிபிசிஆர் முறையில் மேற்கொள்ளாதது ஆகியவற்றை காவல்துறையினர் சுட்டிக்காட்டினர்.

காவல்துறையினர் குவிப்பு

காவல்துறையினர் குவிப்பு

இந்த விளக்கத்தை ஏற்காத பொதுமக்கள் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆங்காங்கே சிறிது சிறியதாக வசூல் செய்து போட்டி நடத்துவதற்கு ஏற்பாடு செய்தால் இப்படி நடத்த விடாமல் முட்டுக்கட்டை போடுவது சரிதானா? என்றும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதனையடுத்து இன்று நடைபெற இருந்த போட்டி தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கிராம மக்களுடன் காவல்துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து அக்கிராமத்தில் ஏராளமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+