20% கட்டிங்.. இந்தியாவிலேயே ஊழல் ஆட்சி திமுகவின் ஆட்சி தான்.. புதுக்கோட்டையில் அமித்ஷா அட்டாக்
புதுக்கோட்டை: ‛‛ ஒட்டுமொத்த நாட்டிலேயே எங்காவது மிகப்பெரிய ஊழல் நிறைந்த கட்சி, ஊழல் நிறைந்த ஆட்சி என்று சொன்னால் அது திமுகவின் ஆட்சி தான். தேர்தல் அறிக்கையிலேயே மிககுறைவான வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஆட்சி திமுகவின் ஆட்சி தான். ஊழல் நிறைந்த அமைச்சர்கள், அமைச்சரவையை வைத்து கொண்டு தமிழ்நாடு வளர்ச்சி காண முடியுமா? தமிழ்நாட்டில் 20 சதவீதம் கட்டிங் கொடுக்க வேண்டும் என்ற நிலைமை உள்ளது வரவு செலவு அறிக்கை கடன் மற்றும் டாஸ்மாக் வருவாயாக தான் உள்ளது'' என மத்திய உள்துறை அமைச்சர் புதுக்கோட்டையில் விமர்சனம் செய்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ‛தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட யாத்திரை பிரசார கூட்டத்தின் நிறைவு விழா புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்து வயலில் நடைபெற்றது.

இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயல் உள்பட பிற முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் அமித்ஷா பேசியதாவது:
இனி வரும் நாட்களில் பாஜகவும், அதிமுகவும் இன்னும் பிற கூட்டணி கட்சிகளும் வலுவான கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க போகிறோம் எப்பாடிபட்டவாது திமுகவின் ஆட்சியை ஒழித்தே தீருவோம். மக்களே.. ஒட்டுமொத்த நாட்டிலேயே எங்காவது மிகப்பெரிய ஊழல் நிறைந்த கட்சி, ஊழல் நிறைந்த ஆட்சி என்று சொன்னால் அது திமுகவின் ஆட்சி தான்.
தேர்தல் அறிக்கையிலேயே மிககுறைவான வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஆட்சி திமுகவின் ஆட்சி தான் . சகோதரிகள், தாய்மார்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. தமிழ்நாடு அரசின் ஒரே நோக்கம் என்று சொன்னால் அது முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்குவது தான். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் இருக்கை. தேர்வுகளை தமிழில் எழுதும் வசதிகளை பாஜக ஏற்படுத்தி உள்ளது.
செங்கோலினை காங்கிரஸ் மற்றும் திமுக அருங்காட்சியகத்தில் பாதுகாத்தனர். ஆனால் பிரதமர் மோடி அதனை நாடாளுமன்றத்தில் வைத்து அழகு பார்க்கிறார். துணை குடியரசு தலைவராக சிபி ராதாகிருஷ்ணனை பதவியில் அமர்த்தி இருக்கிறார் பிரதமர் மோடி. இந்த திமுக அரசு ஊழலுக்கான எடுத்துக்காட்டு. ஊழலுக்கான அடையாளமாகி விட்டது.
மணலை அள்ளும் ஊழல் பெயரில் ஒரு தலைவரின் பெயர் உள்ளது. ஒரு தலைவரின் பெயர் நிலக்கரி ஊழலுடன் தொடர்பு கொண்டு வெளிவந்துள்ளது. ஒரு தலைவரின் பெயர் ரூ.6,000 கோடி ரூபாய் ஊழலில் தொடர்புப்படுத்தி வெளியாகி உள்ளது. இத்தனை ஊழல் நிறைந்த அமைச்சர்கள், அமைச்சரவையை வைத்து கொண்டு தமிழ்நாடு வளர்ச்சி காண முடியுமா? . தமிழ்நாட்டில் 20 சதவீதம் கட்டிங் கொடுக்க வேண்டும் என்ற நிலைமை உள்ளது. வரவு செலவு அறிக்கை கடன் மற்றும் டாஸ்மாக் வருவாயாக தான் உள்ளது.
தமிழக அரசு எவ்வளவு மோசமானது என்று சொன்னால் அரசு ஊழியர்கள் தெருவில் இறங்கி போராடும் நிலை உள்ளது. தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் தெருவில் இறங்கி போராடும் கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 1,300 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். நர்ஸ், அங்கன்வாடி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் உண்மையில் சிக்கல் வரும். திமுக அரசு தமிழகத்தை எப்படி ஆக்கி இருக்கிறது தெரியுமா? மற்ற மாநிலங்களின் நச்சு கழிவுகளுக்கான குப்பை கிடங்காக மாற்றி உள்ளது'' என்று கடுமையாக சாடினார்.
-
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications