ஷாக் வீடியோ.. பட்டப்பகலில்.. நடுத்தெருவில்.. குடிபோதையில்.. நண்பனை அரிவாளால் சரமாரி வெட்டும் நபர்

நண்பரை அரிவாளால் வெட்டிய நபரின் வீடியோ வைரலாகிறது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    புதுக்கோட்டை.. நண்பருக்கு அரிவாள் வெட்டு.. வைரலாகும் வீடியோ

    புதுக்கோட்டை: இன்னும் நாம என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்கணுமோ தெரியாது.. நடுத்தெருவுல.. பட்டப்பகலிலே.. குடிபோதையில.. ஒரு இளைஞர் இன்னொரு இளைஞரை சரமாரியாக அரிவாளால் வெட்டுகிறார். இந்த வீடியோதான் வைரலாகி நமக்கு வயித்தெரிச்சலை தந்து வருகிறது.

    புதுக்கோட்டை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரும் புதுக்கோட்டை அருகே உள்ள இம்மனாம்பட்டியை சேர்ந்த சுந்தரம் என்பவரும் ஆருயிர் நண்பர்களாம்.

    Young man was brutally cut with scythe by his friend

    இந்நிலையில் ரவி, புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியில் உள்ள பழைய எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு குடிபோதையில் சுந்தரம் வந்தார். லுங்கியை கழட்டி தோள் மீது போட்டுக் கொண்டு, ரவியிடம் ஏதோ பேசுகிறார்.

    என்ன விஷயமோ தெரியாது, திடீரென்று, சுந்தரத்திற்கும், ரவிக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், திடீரென முதுகில் சொருகி இருந்த அரிவாளை எடுத்து, ரவியை சரமாரியாக தாக்கினார். ஐயோ.. அம்மா என்று ரவி அலறினாலும், இரு கைகளால் அரிவாளை பிடித்து கொண்டு ஓங்கி வெட்டுகிறார் சுந்தரம். இதில் ரவி படுகாயமடைந்தார்.

    அரிவாளால் வெட்டுவதை, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தபடியே அதிர்ச்சியில் நின்றனர். ஆனால் ஒருசிலர், போதையிலும், அரிவாளை வைத்துக் கொண்டும் நிற்கும் சுந்தரத்தை அருகில் சென்று கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், கற்களை எடுத்து அவர் மீது தாக்கினார்கள். இதனால் சுந்தரமும் படுகாயம் அடைந்தார்.

    பொதுமக்கள் உடனடியாக இது குறித்து கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கணேஷ் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுந்தரம் மற்றும் ரவியை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகிறார்கள். ரவியை சுந்தரம் அரிவாளால் வெட்டும் காட்சியை யாரோ வீடியோ எடுத்து பதிவிடவும், அது பெரிய பரபரப்பை, அதிர்ச்சியை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+