பிரதமர் வேட்பாளர் எனும் 'ஆணியே' வேண்டாம்.. 'இந்தியா' கூட்டணியில் ஏன் சண்டை? ஒரே போடு போட்ட 'பவார்'!
புனே: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை "இந்தியா" கூட்டணி பிரதமர் வேட்பாளர் இல்லாமலேயே சந்திக்கலாம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் யோசனை தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜகவை வீழ்த்தும் வகையில் 28 எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. பாட்னா, பெங்களூர், மும்பை, டெல்லி என 4 ஆலோசனைக் கூட்டங்களை 'இந்தியா' கூட்டணி நடத்தி உள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் 'இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்பது; தொகுதி பங்கீட்டை சுமூகமாக மேற்கொள்வது என்பது 'இந்தியா' கூட்டணியின் முன் உள்ள பிரதான சவால்கள். இதற்கு அப்பால், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் யார் என்பதிலும் பெரும் குழப்பம் நிலவுகிறது.
இந்தியா கூட்டனியின் ஒருங்கிணைப்பாளர் பதவி, பிரதமர் வேட்பாளர் ஆகியவற்றை ரொம்பவே எதிர்நோக்கி இருப்பவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். ஆனால் டெல்லியில் டிசம்பர் 19-ந் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை மமதா பானர்ஜியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தனர். இதில் நிதிஷ்குமாரும் அவரை ஆதரித்த லாலு பிரசாத் யாதவும் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் 'இந்தியா' கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலைமையும் உருவானது. இதனையடுத்து நிதிஷ்குமாரை தொலைபேசியில் அழைத்து ராகுல் காந்தி சமாதானப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடுதான் இப்போது முதன்மையானது. ஒருங்கிணைப்பாளர் பதவி, பிரதமர் வேட்பாளர் குறித்து எல்லாம் எனக்கு கோபமோ, அதிருப்தியோ எதுவும் இல்லை என்றார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், 1977-ல் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்தன. அப்போது யாரும் மொரார்ஜி தேசாய்தான் பிரதமர் வேட்பாளர் என்றெல்லாம் சொல்லவில்லை. தேர்தலில் வென்ற பின்னர் அனைவரும் சேர்ந்து பிரதமர் யார் என முடிவு செய்யலாம். ஆகையால் 2024-ம் ஆண்டு தேர்தலை 'இந்தியா' கூட்டணியும் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு செய்யாமலே தேர்தலை சந்திக்கலாம் என்றார் சரத்பவார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications