எல்லைத் தாண்டியதாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது… இலங்கை கடற்படை நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எல்லைத் தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்கள் தாக்குதல் நடத்துவதும், கைது செய்துவம் தொடர்கதையாகி வரும் நிலையில், படகுகளுடன் 13 மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்ததுள்ளது.

13 tamil nadu fishermen arrested by sri lankan navy near Neduntheevu

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க இரு படகுகளில் சென்ற மீனவர்கள் 13 பேரும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 13 பேரையும் அவர்களது படகுகையும் சிறை பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். விசாரணையை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொடரும் கைது நடவடிக்கையால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் , கச்சத்தீவு மீட்கப்படும், தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வரும் சூழலில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+