ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்வர் வேட்பாளர்.. முன்னாள் எம்பி அன்வார் ராஜா பேச்சால் மீண்டும் அதிமுகவில் வெடித்த சர்ச்சை

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்திதான் அதிமுக சந்திக்கும் என அக்கட்சியின் முன்னாள் எம்பி அன்வர் ராஜா கூறியுள்ளார். கட்சி தலைமையின் எச்சரிக்கையை மீறி அன்வர் ராஜா தெரிவித்துள்ள கருத்தால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

Recommended Video

    Admk vs Bjp: வார்த்தை மோதலில் ஈடுபட்ட அதிமுக, பாஜக

    அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஓய்ந்திருந்திருந்த நிலையில் மீண்டும் கிளப்பி இருக்கிறது. சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ தேர்தல் வெற்றி பெற்ற பின்னர் எம்எல்ஏக்கள் கூடி முதல்வரை தேர்வு செய்வார்கள் என்று கூறினார்.

    இதற்கு உடனடி பதிலடியாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதல்வர் வேட்பாளர் என்றும் அவரை முன்னிறுத்தி தான் தேர்தலை சந்திப்போம் என்றும் கூறினார்.

    இந்தி தெரியாதவர்களை நான் வெளியேற சொன்னேனா?.. நடந்தது என்னை.. ராஜேஷ் கோட்சே விளக்கம்இந்தி தெரியாதவர்களை நான் வெளியேற சொன்னேனா?.. நடந்தது என்னை.. ராஜேஷ் கோட்சே விளக்கம்

    தேனியில் போஸ்டர்

    தேனியில் போஸ்டர்

    இதனிடையே துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் தான் முதல்வர் என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது. இதனால் இரு தரப்பிலும் அதிருப்தி இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியது.

    அதிமுக எச்சரிக்கை

    அதிமுக எச்சரிக்கை

    அதன்பிறகு முதல்வர் வேட்பாளர் குறித்த யாரும் சர்ச்சை எழுப்பக்கூடாது என்றும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் அதிமுகவினருக்கு ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டனர். இதனால் சர்ச்சை ஓய்ந்திருந்தது.

    முதல்வர் வேட்பாளர்

    முதல்வர் வேட்பாளர்

    இந்நிலையில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தியே அதிமுக தேர்தலை சந்திக்கும் என பரமக்குடியில் முன்னாள் எம்பி அன்வர் ராஜா கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக இளைஞர், இளம்பெண் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாநில அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் எம்பியுமான அன்வர்ராஜா பேசுகையில், கடந்த காலங்களில் பல கட்சிகளில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதில் பிரச்னை ஏற்பட்டு உள்ளது.

    முதல்வரை நிறுத்துவோம்

    முதல்வரை நிறுத்துவோம்

    எனவே முதல்வர் வேட்பாளர் பற்றி பேசுவது ஒன்றும் புதிது அல்ல. கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வர் ஆனார். ஆனால் தற்போது அதே நிலைமை நீடிக்காது. வரும் 2021 தேர்தலில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்திதான் அதிமுக தேர்தலை சந்திக்கும்" இவ்வாறு அவர் கூறினார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து யாரும் பேசக்கூடாது என்று அதிமுக தலைமை தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி முன்னாள் எம்பி அன்வார ராஜா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Former AIADMK MP Anwar Raja has said that aiadmk party will meet in the forthcoming assembly elections with Chief Ministerial candidate . Controversy has erupted again over Anwar Raja's comments despite warnings from the party leadership.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X