Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மறக்க முடியாத ராமேஸ்வரம் காதலன்.. திருமணமாகி 5 ஆண்டாகியும் மாறாத காதல்! நெஞ்சுக்குள்ளே இன்னொரு உயிர்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: காதல் விவகாரத்தில் குடும்பத்தினரின் மறுப்பு, பிறகு ஏற்பட்ட நெருக்கடி மற்றும் மனஅழுத்தங்கள் போன்றவை சில இளம் வயதுக்காரர்களை தற்கொலை வரை கொண்டு சென்றுவிடுகிறது.. அப்படித்தான் ராமேஸ்வரம், கிருஷ்ணகிரியில் 2 மரணங்கள் நடந்துள்ளன.. திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்கு பிறகும்கூட, தன்னுடைய காதலனை இளம்பெண்ணால் மறக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்... பிறகு என்ன நடந்தது?

அந்த காதல் ஜோடி பெயர் சசிகலா - பாண்டி... கேணிக்கரை வலசை என்ற பகுதியை சேர்ந்த 28 வயது பாண்டி ராமேஸ்வரத்தில் டிராவல்ஸ் தொழில் நடத்தி வந்தார்.

Rameswaram married woman love

இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.. இதற்காக பாண்டியின் பெற்றோர், சசிகலாவை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்..

சசிகலா காதல்

ஆனால் சசிகலாவின் குடும்பத்தினர் அந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.. இந்த காதலையும் எதிர்த்தனர்.. அதுமட்டுமல்ல, சசிகலாவின் அப்பா, அவர்களை தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

பிறகு தங்கள் மகளுக்கு, உறவுக்கார பையனையே திருமணமும் செய்து வைத்துவிட்டார்கள்.. இந்த திருமணம் நடந்து 5 வருடங்களாகிவிட்டது.. இப்போது இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

காதலனை மறக்க முடியவில்லை

ஆனால் திருமண வாழ்க்கையில் இருந்தபோதும், சசிகலா தனது பழைய காதலனான பாண்டியுடன் தொடர்பை துண்டிக்காமல், தொடர்ந்து செல்போன் மூலம் பேசி வந்ததாக தெரிகிறது..

கடந்த மாதம், சசிகலாவின் கணவர் முருகன், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.. இந்த நேரத்தில், சசிகலா தனது காதலன் பாண்டியுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, பாண்டி மற்றும் சசிகலாவை கண்டுபிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு இருவரிடமும் மற்றும் பெற்றோரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. சசிகலாவுக்கு அறிவுரை சொன்னார்கள்.. இறுதியில் அவரது அப்பா கண்ணனுடன் சசிகலாவை பத்திரமாக வீட்டிற்கும் அனுப்பி வைத்துள்ளனர்..

Rameswaram married woman love

காற்றில் கரைந்த அட்வைஸ்

ஆனால் போலீசார் சொன்ன அத்தனை அறிவுரைகளும் காற்றில் கரைந்து போய்விட்டது.. சசிகலாவின் மனதில் அந்த பழைய காதலை மறக்கவே முடியவில்லை..

கணவனுடன் நிம்மதியாக வாழ முடியாமல், காதலனுடனும் சேர்ந்து வாழ முடியாமல் தவித்து வந்தார் சசிகலா.. இதனால் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது.. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தன்னுடைய அப்பாவின் வீட்டிலேயே சசிகலா தற்கொலை செய்து கொண்டார்.. இந்த சம்பவம் குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன் தி வே - சாலையோரம் மரம்

இதனிடையே, சசிகலாவின் காதலன் பாண்டி, நேற்று முன்தினம் ராமேஸ்வரத்திலிருந்து பெங்களூருக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றிருந்தார். அங்கு பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் ராமேஸ்வரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்..

தர்மபுரி மாவட்டம் பாளையம் சுங்கச்சாவடி அருகே வந்தபோதுதான் சசிகலா தற்கொலை செய்து கொண்ட தகவல் அவருக்கு கிடைத்துள்ளது. இந்த செய்தியை கேட்டதும் கடும் அதிர்ச்சி அடைந்த பாண்டி, சுங்கச்சாவடி அருகே காரை நிறுத்திவிட்டு, சாலையோரத்தில் இருந்த மரத்தில் கயிறு கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், இந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதறிப்போன கிருஷ்ணகிரி

திருமணம் ஆகி 5 ஆண்டுகள் கடந்த பிறகும் காதலை மறக்க முடியாமல் போராடிய இளம் பெண் உயிரை முடித்துக் கொண்டதும், அந்த தகவலை அறிந்து அதிர்ச்சியில் காதலன் தற்கொலை செய்து கொண்டதும், கிருஷ்ணகிரி, ராமேஸ்வரத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒருவருக்கு பின் ஒருவராக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையறிந்து அவரவர் குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது.. உயிரிழந்த சசிகலாவின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பாண்டியன் உடல் கிருஷ்ணகிரி மருத்துவமனையிலும் போஸ்ட் மார்ட்டத்துக்காக அனுப்பப்பட்டுள்ளது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+