ராமநாதபுரம் முழுக்க இப்படியா.. 600 பவுன் தங்கம்.. விஜயசாந்தியின் வில்லத்தனம்.. கடைசியில் திருப்பம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சதுரங்க வேட்டை பட பாணியில் ஆசையை தூண்டி மக்களை ஏமாற்றி உள்ளனர் ஒரு தம்பதியினர்.. தங்க நகைகளை வாங்கி அடகு வைப்பதுடன், திருப்பி தருவதுடன் பவுனுக்கு ரூ.10 ஆயிரம் உடனடியாக தருவதாக கூறி 600 பவுன் நகைகளை வசூலித்து, அதனை அடகு வைத்து ரூ.4 கோடி மோசடி செய்திருக்கிறார்கள்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்று சொல்வதா? அல்லது ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று சொல்வதா? இதில் எந்த பதம் இந்த சம்பவத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதை மக்களே முடிவு செய்து கொள்ளட்டும்.. எத்தனை சதுரங்கவேட்டை படம் வந்தாலும், மனிதனின் ஆசை தூண்டி வெற்றி பெறுபவர்கள் வெற்றி பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்..

இன்றைக்கு விரைவாக பணம் சம்பாதிக்க ஆசைப்படும் மக்களை குறிவைத்து, அவர்களின் ஆசையை தூண்டி, சம்பந்தமே இல்லாத கட்டுக்கதைகளை நம்ப வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள்.. ஈஸியாக முன்னேற வேண்டும் என்பதை இலக்காக கொண்ட எளிய மக்களே ஏமாற்றுபவர்களின் குறியாக உள்ளது.
எங்கள் ஊரில் ஒருவர் இருந்தால், அவரிடம் ஒரு கோடி மதிப்புள்ள வீடு இருந்தது. அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர், அவர் ஒவ்வொருவரிடம் 5ம் தேதியால் வட்டியை சரியாக வீடு தேடி போய் கொடுப்பார். ஊரில் அவர் சரியாக வட்டி கொடுப்பதை பார்த்த பலர், அவருக்கு கடன் தர ஆர்வம் காட்டினார்கள்.. ஆனால் அவரோ ஒருவரிடம் கடன் வாங்கி இன்னொருவருக்கு வட்டி கட்டுகிறார்கள். இப்படி சுழற்சியாகஅந்த ஊர் முழுக்க 48 கோடி ரூபாய் கடன் வாங்கினார். 5 மாதம் , 4 மாதம் வட்டி வாங்கியிருப்பார்கள்.. 5 லட்சம் முதல் 5 கோடி வரை கடன் கொடுத்த மக்களுக்கு அவர் ஒரு நாள் கம்பி நீட்டினார்.. வீட்டை ஜப்தி செய்யலாம் என்று நினைத்தால் வீட்டின் பேரில் ஏற்கனவே வங்கியில் ஒரு கோடி கடன் வாங்கியிருக்கிறார். கடன் வாங்கிய நபர் ஊரை விட்டே ஓடிவிட்டார்,. பணத்தை கடைசி அவர்களால் மீட்க முடியவில்லை. இதேபோல் பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடக்கிறது.
அதில் ஒரு சம்பவம் தான் ராமநாதபுரம் மாவட்டம் பனையடிந்தல் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. பனையடிந்தல் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதாகும் இளைஞர் வீரப்ப மொய்லி . இவருடைய மனைவி விஜயசாந்தி (28). இவர் திருப்பூரில் அறக்கட்டளை ஒன்றில் முக்கிய நிர்வாகியாக இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் ராமநாதபுரத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்ய உள்ளதாக கூறியிருக்கிறார்
இவர் தனது கணவர் வீரப்ப மொய்லியுடன் சேர்ந்து, மேற்கண்ட அறக்கட்டளைக்கு கொரோனா காலத்துக்கு பின்பு வெளிநாட்டில் இருந்து பணம் கிடைப்பதில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக தாமதம் வந்துள்ளதாகவும். இதற்காக நிறுவனத்திற்கு நிதி உதவி கிடைக்கும் வகையில் நகைக்கடன் வாங்கி கொடுக்கும் நபர்களுக்கு பணமும், குடும்பத்திற்கு தேவையான மளிகை சாமான்கள் தொகுப்பும், பண்டிகை காலங்களுக்கு செலவுக்கு பணமும் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்கள்
நகையை அடகு வைப்பதுடன், அதை திருப்பி தரும்போது, பவுனுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் தருவதாகவும், மேலும் நகைகளை திருப்பி தந்துவிடுவதாகவும் விஜயசாந்தி, வீரப்பமொய்லி தம்பதி மற்றும் விஜயசாந்தியின் தந்தை முருகேசன், தாய் ஆறுமுகம், அக்காள் காளீஸ்வரி, தம்பி செந்தில் முருகன் ஆகியோர் தொடர்ந்து மூளைச்சலவை செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் நம்ப வைக்க சிலருக்கு பணமும், நகையை திருப்பியும் தந்துள்ளனர். இதனால் இவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பிய நம்பி பனையடியேந்தல் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 76 பேர் சுமார் 600 பவுன் நகைகளை கொடுத்திருக்கிறார்கள்.
இந்த நகைகளை பெற்றுக் கொண்ட கணவன்-மனைவி உள்ளிட்டோர், கிராமத்தைச் சேர்ந்தவர்களின் பெயரில் பல்வேறு நிதிநிறுவனங்களில் நகைகளை அடகுவைத்து கடன் பெற்று மேற்படி கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியுள்ளார்கள். இதனால் நகைக்கடன் கொடுத்த நிதிநிறுவனத்தினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடனை செலுத்துமாறு நெருக்கடி தந்துள்ளார்கள். இதனால் கணவன்- மனைவி உள்ளிட்டோரிடம் சென்று பணம் கேட்டபோது பணத்தை கட்டாமல் ரூ.4 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து பனையடியந்தல் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மனைவி இருளாயி உள்பட ஏராளமானோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷிடம் புகார் கொடுத்தனர். எஸ்பியின் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரப்ப மொய்லி மற்றும் விஜயசாந்தி ஆகிய இருவரையும் சென்னையில் கைது செய்தனர். இவர்கள் இருவரும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விஜயசாந்தியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு நீதிபதி அவருக்கு சொந்த ஜாமீன் வழங்கி விடுவித்தார். வீரப்ப மொய்லி ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மோசடி தொடர்பாக போலீசார் விஜயசாந்தியின் தந்தை, தாய் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். இதற்கிடையே அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது நகைகளை மீட்டுத்தரும்படி நேற்று ராமநாதபுரம் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
-
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications