ராமேஸ்வரம் கடற்கரையில் புதைக்கப்பட்ட பார்சல்கள்.. தலை சுற்ற வைத்த மதிப்பு.. உள்ளே என்ன இருந்தது?
ராமநாதபுரம்: ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலை, மருந்து பொருட்கள், மஞ்சள், ஏலக்காய், கஞ்சா, கடல் அட்டை, போதைப்பொருட்கள், வலி நிவாரணி மாத்திரைகள் உள்ளிட்டவை கடத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகின்றன. இதேபோல் இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு தங்கக்கட்டிகள் கடத்தி வருவதும் அவ்வப்போது நடக்கின்றன. ராமேஸ்வரம் கடற்கரையில் பார்சல் ஒன்று இருந்தது. அதன் மதிப்பு மற்றும் அந்த பொருள் என்ன என்பதை பார்ப்போம்.
இலங்கை ராமேஸ்வரத்தில் இருந்து கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது. இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வெறும் 29 கிலோ மீட்டர் தான். 29 கிலோ மீட்டர் கடலில் படகில் பயணித்தால் எளிதாக இலங்கைக்கு போய்விட முடியும். இதன்காரணமாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலை, மருந்து பொருட்கள், மஞ்சள், ஏலக்காய், கஞ்சா, கடல் அட்டை, போதைப்பொருட்கள், வலி நிவாரணி மாத்திரைகள் உள்ளிட்டவை கடத்தப்படுவது அடிக்கடி நடக்கிறது. இதேபோல் இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு தங்கக்கட்டிகள் கடத்தி வருவதும் அவ்வப்போது நடக்கின்றன. இவற்றை கண்டுபிடித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி நடப்பதாக சென்னையில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதைதொடர்ந்து வேதாளை கடற்கரைக்கு போலீசார் விரைந்து சென்று போலீசார் சோதனை நடத்தினர். இதற்கிடையே வேதாளை செல்லும் வழியில் இடையர்வலசை ரயில்வே கேட் பகுதியில் கடற்கரை அருகே மர்மமான முறையில் ஒரு குழியை தோண்டி, பின்னர் மூடி வைத்திருந்தது பற்றி போலீசாருக்கு விசாரணையில் தெரியவந்தது.
எனவே அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த இடத்தில் மீண்டும் தோண்டினர். அப்போது, பார்சல், பார்சலாக அந்த குழியில் இருந்து வெளிவந்தது. அந்த குழியை மீண்டும் முழுவதுமாக தோண்டியதில் மொத்தம் 88 பார்சல்கள் மீட்டு எடுக்கப்பட்டன. அவற்றை சோதித்தபோது அவை அனைத்தும் கஞ்சா பார்சல்கள் என தெரியவந்தது.
ஒவ்வொரு பார்சலிலும் தலா 2 கிலோ வீதம் மொத்தம் 176 கிலோ கஞ்சா பிடிபட்டு உள்ளது. இந்த கஞ்சா பார்சல்களை கடத்தி வந்து கடற்கரை அருகே மணலில் புதைத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். பின்னர், இதுகுறித்து வேதாளை பகுதியை சேர்ந்த சத்தீசுவரன், காமேஷ், கண்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
3 பேரிடம் நடத்திய விசாரணையில், இந்த கஞ்சா பார்சல்களை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்ததாகவும், மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. மீட்கப்பட்டுள்ள கஞ்சா பார்சல்களின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று போலீசார் கூறினார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications