Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தா சொல்லிட்டாரே..‘மீண்டும்’ இணையும் அதிமுக! எடப்பாடி டீமில் இருந்து வந்த முதல் குரல்! ஷாக் தான்!

Subscribe to Oneindia Tamil

இராமநாதபுரம் : வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து அதிமுகவினரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்போம் எனவும், மீண்டும் வெற்றி வாகை சூடுவோம் என இராமநாதபுரத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசிய பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுகவின் இரு பெரும் தலைவர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது தென் மாவட்ட அமைச்சர் ஒருவரின் பேச்சு திடீர் பரபரப்புகளை கிளப்பி இருக்கிறது.

அமித்ஷா உடனான சந்திப்புக்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்து மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலாக எதிர்கொள்வார்கள் என தகவல் வெளியானது.

மீண்டும் இணைப்பு

மீண்டும் இணைப்பு

இந்நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து அதிமுகவினரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்போம் எனவும், மீண்டும் வெற்றி வாகை சூடுவோம் என இராமநாதபுரத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசிய பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது. அரண்மனை பகுதியில் மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறப்புரை ஆற்றினார்.

மாஜி மணிகண்டன்

மாஜி மணிகண்டன்

அப்போது பேசிய மணிகண்டன்," தமிழகத்தில் கலெக்சன், கரப்ஷன் அதிகமாக அனைத்து துறைகளிலும் உள்ளது. அதிமுகவின் திட்டங்களை தான் தற்பொழுது திறந்து வைத்து வருகிறார்கள். புரட்சித்தலைவி அம்மாவால் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை முடக்கி விட்டனர். தமிழகம் முழுவதும் 46 லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைகளை அடமானம் வைத்துவிட்டு தற்பொழுது ஏமாற்றம் அடைந்துவிட்டனர்.

சிறு சிறு பிளவு

சிறு சிறு பிளவு

தேர்தலில் பொதுமக்களிடம் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது திமுகவினர் பொய் வழக்கு போடுவது தொடர்ச்சியாகி வருகிறது. சிறைக்குச் செல்லவும் தயாராக உள்ளோம். சிறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. அதிமுகவில் தற்போது சிறு சிறு பிரிவுகளாக பிரிந்து இருக்கின்றது.

இரட்டை இலை

இரட்டை இலை

வரும் தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று கூடி விடுவோம். வரும் தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்போம். அதிமுகவினர் எந்த காலத்திலும் சூரியனுக்கு வாக்கு கேட்க மாட்டோம். ஆகையால் அனைத்து அதிமுகவினரும் ஒன்றிணைந்து 100 சதவீத வாக்குகளை பெறுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசினார். அணிகள் மீண்டும் இணையும் என மாஜி அமைச்சர் கூறியிருப்பது இராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+