பொது சிவில் சட்டம்! ஜமாத் அமைப்புகள் முதலில் இதைச் செய்யணும்! தமிமுன் அன்சாரி பேச்சு!
ராமநாதபுரம்: நாட்டை எப்போதுமே பதற்றத்துடன் வைத்திருக்க வேண்டும் என மத்திய பாஜக அரசு விரும்புவதாகவும் பொது சிவில் சட்ட விவகாரத்தை பக்குவமாக உணர்ச்சிவசப்படாமல் அணுக வேண்டும் எனவும் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்ட ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் 'No Need Common Civil Code' என எதிர்ப்பை பதிவிடுமாறும் வெள்ளிக்கிழமை ஜும்மாவின் போது இது குறித்து ஜமாத் அமைப்புகள் எடுத்துக் கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் நடைபெற்ற திருமண விழாவில் அவர் பேசியதாவது;
"நாடு இன்று நெருக்கடியான சூழலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், மதவாதம் ஆகியவை முக்கியப் பிரச்சனைகளாக உள்ளது. இவற்றின் மீது மக்களின் கவனம் குவிந்து விடக்கூடாது என்பதற்காக, மக்கள் கவனத்தை திசை மாற்றும் சூழ்ச்சிகளை ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், வலதுசாரிகளும் செய்கிறார்கள்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார்கள். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் தலா 15 லட்சத்தை செலுத்துவோம் என்றார்கள்.இதை ஏன் செய்யவில்லை? என கேட்கக் கூடாது என்பதற்காகத்தான் இப்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் 'பொது சிவில் சட்டத்தை' கொண்டு வருவோம் என்கிறார்கள்.
நாட்டை பதட்டத்திலேயே வைத்திருக்க விரும்புகிறார்கள். நாடு சந்திக்கும் அடிப்படை பிரச்சனைகளிலிருந்து மக்கள் கவனத்தை மதவாதத்தின் பக்கம் திருப்புவதே அவர்களின் நோக்கமாகும். இதை கவனத்தில் கொண்டு நாம் இப்பிரச்சனைகளை பக்குவமாக, உணர்ச்சிவசப்படாமல் அணுக வேண்டும்.
திருமணம், விவாகரத்து, சொத்து பகிர்வு, குழந்தை தத்தெடுத்தல், வழிபாட்டுரிமை, வக்பு சொத்து பராமரிப்பு ஆகியவை மட்டும் தான் முஸ்லிம்களுக்கு சிவில் சட்டத்தில் விதிவிலக்கு உள்ளது.இதுபோல் மற்றவர்களுக்கும் உள்ளது. இது தனி நபர் சம்மந்தப்பட்ட அல்லது சமூகம் சம்மந்தப்பட்ட தனி உரிமைகள்.கிரிமினல் சட்டம் அனைவருக்கும் பொதுவானது.இதை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
சட்ட ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் 'No Need Common Civil Code' என எதிர்ப்பை பதிவிடுங்கள். மற்ற மக்களையும் பதிவிட கூறுங்கள்.
வெள்ளிக்கிழமை ஜும்மாவின் போது இதை ஜமாத்துகள் முன் எடுக்க வேண்டும் என மஜக சார்பில் கேட்டுக்கொண்டுள்ளோம். இது போன்ற தருணங்களில் நம்மை சுற்றி வாழும் அனைத்து மக்களையும் அரவணைத்து, புரிய வைத்து அவர்களுடன் இணைந்து எதிர்வினையாற்ற வேண்டும்.
சமூகநல்லிணக்கம் மற்றும் பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவதன் மூலமே ஃபாசிசவாதிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க முடியும்."
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications