“கை நழுவிய” ஜெயலலிதாவின் முத்துராமலிங்க தேவர் தங்க கவசம்.. வெள்ளிக்கவசம் வழங்கி சமாளிக்கும் ஓபிஎஸ்
ராமநாதபுரம்: உட்கட்சிப் பூசல் காரணமாக முத்துராமலிங்க தேவருக்கு ஜெயலலிதா அளித்த தங்க கவசத்தை அணிவிக்கும் உரிமையை அதிமுக தலைவர்கள் இழந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கவசத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115 வது ஜெயந்தி மற்றும் 60 வது குருபூஜை விழா இன்று நடைபெற்று வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, தேவர் சிலைக்கு தங்க கவசம் ஒன்றை அணிவித்து இருந்தார்.

தங்க கவசம்
அந்த தங்க கவசம் பாதுகாப்பு கருதி மதுரையில் உள்ள வங்கியில் அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் இருவரும் கையெழுத்திட்டு பாதுகாப்புடன் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதிமுக தற்போது இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் ஓபிஎஸ் சார்பிலும் தங்களிடம் தங்க கவசத்தை கொடுக்குமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்து மீண்டும் வங்கியில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தி இருந்தது.

தங்க கவசம் அணிவிப்பு
இதனை தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி வங்கியில் மதுரை வருவாய்த்துறை மற்றும் தேவர் நினைவாலயம் சார்பில் தங்க கவசம் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து 27 ஆம் தேதி தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ் அறிவிப்பு
இந்த நிலையில் இன்று பசும்பொன் சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகவும், தமிழ்நாட்டின் நலன்களுக்காகவும் அரும்பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு வெள்ளிக் கவசம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவரும்; ஆன்மீகம், தேசியம், பொதுவுடைமை, ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றை குறிக்கோள்களாகக் கொண்டு செயல்பட்டவரும்; தமிழகம் உயர, தமிழ்நாடு வளம் பெற, தமிழ்ச் சமுதாயம் மேம்பட உழைத்தவரும், 'வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம், விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்' என்று முழங்கியவரும், தன்னலமின்றி நாட்டிற்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காகவும் அரும்பாடுபட்டவர் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

வெள்ளிக்கவம்
அவரது 115-வது பிறந்த நாள் மற்றும் 60-வது குருபூஜை நாளான இன்று (30-10-2022) மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவாக, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் இதர சுப நாட்களில் வெள்ளிக் கவசம் அணிவிக்கும் பொருட்டு, 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடக் காப்பாளர் திருமதி ந. காந்தி மீனாள் அம்மையார் அவர்களிடம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கி மரியாதை செலுத்துவார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications