எனக்கு அழுகையே வருது.. எல்லையில் கலங்கும் ராணுவ வீரர்.. ராமநாதபுரத்தில் மனைவி தாக்கப்பட்டதாக வீடியோ
ராமநாதபுரம்: எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஊரில் உள்ள தனது தாய் மற்றும் மனைவியை நிலப்பிரச்னை காரணமாக உறவினர்கள் சிலர் தாக்கியதாக ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதியைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி ஜெகன் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதியைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி ஜெகனின் மனைவி மற்றும் தாயார் தாக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதியைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி ஜெகன் என்பவரின் மனைவி மற்றும் தாயாரை அவரது உறவினர்கள் நிலப்பிரச்சனை காரணமாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது போர் சூழலில் தனக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முரளி ஜெகன் என்ற ராணுவ வீரர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ராணுவ வீரர் முரளி ஜெகன் கூறுகையில், "எஸ்பி சார் வணக்கம், நான் ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் வட்டம் ஏனாதி கிராமத்தில் இருந்து முரளி ஜெகன் பேசுகிறேன் சார்.. நான் 2020ம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவத்தில் வேலை செய்து வருகிறேன்.
நாங்கள் 2013ம் ஆண்டு ஏனாதியில் எங்கள் தாத்தாவின் பெயரில் உள்ள பட்டாவில் வந்து 3 பங்காக பிரித்து எங்கள் பங்கில் நாங்கள் வீடு கட்டியிருக்கிறோம். ஆனால் என் அப்பாவின் அண்ணன் ராமச்சந்திரன், நாங்கள் வீடுகட்டியதை காண்பித்து லோன் வாங்கிவிட்டார். அப்போது சண்டை போட்டு விட்டுவிட்டோம். ஆனால் அவர் நிலம் தனியாக கிடக்கிறது. இப்போது 2025ல் வந்து கடன் எனக்கு அலர்ட் ஆகி உள்ளது. எனவே கேஸ் கொடுத்து அதனை என் மேல் (நிலத்தை) எடுப்பேன் என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் கடந்த ஜனவரி மாதமே எஸ்பியிடம் புகார் அளித்துள்ளேன். கலெக்டருக்கு புகார் கொடுத்துள்ளேன். ஆனால் இந்த விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு காரணம் அவரது மகள்.. அவரது எஸ்ஐயாக இங்கு தான் பணியாற்றி வருகிறார்.. அதனால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்கள். அவரது இன்னொரு மகள் ஆர்ஐ ஆக உள்ளதால் வருவாய்துறையிலும் புகார் எடுக்காமல் உள்ளார்கள்.. நான் என்ன தான் செய்வது.. இப்போது நான் பூட்டானில் இருக்கிறேன்.. ஜனவரி மாதத்தில் இருந்து ஐந்து மாதங்களாக பூடானில் இருக்கிறேன்.. போர் நடப்பதால் எப்படி வருவோம் என்று தெரியவில்லை..
வீட்டு ரசீதை மாற்றப்போன போது, ராமச்சந்திரனின் மருமகன் அடிக்க வந்துள்ளார். அத்துடன் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் 6 பேர் சேர்ந்து என் மனைவி மற்றும் தாயாரை அடித்து காயப்படுத்தி உள்ளனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் இருக்கிறார்கள்.. என் அம்மா இப்போது சீரியஸாக இருக்கிறார். எனக்கு அழுகையே வருது.. ஆனால் எங்களை அடித்துவிட்டு அவர்கள் மருத்துவமனையில் போய் படுத்துள்ளார்கள். இதற்கு எஸ்ஐ தான் காரணம்.. ஊரில் சென்று விசாரிக்க வேண்டுகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications