ராமேஸ்வரத்தில் ரயிலை மறிப்போம்.. ராமநாதபுரத்தில் மீனவர்கள் கைதை கண்டித்து இன்று போராட்டம்.. பரபரப்பு
இராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடத்துவுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து தங்கச்சி மடத்தில் இன்று இந்த ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இலங்கையில் உள்ள மீனவர்களையும்,படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக வேலைநிறுத்தம் நடைபெற்றுவரும் நிலையில், இன்று ரயில் மறியல் நடக்க உள்ளது.
தமிழக மீனவர்களை நடுக்கடலில் கைது செய்வதும், அவர்களின் வலைகளை அறுத்து வீசுவதும், விசைப் படகுகளை பறிமுதல் செய்வதும் என இலங்கை கடற்படையினரின் அராஜகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

முக்கியமாக, இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும்போது, எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர். மேலும், அவர்களுடைய மோட்டார் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து கொள்கின்றனர்.
வலைகள் அறுப்பு
இதனால் படகுகள் சேதமடைவதோடு, மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இலங்கை கடற்படையினரின் அராஜகத்தை தடுத்து நிறுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கையை விடுத்தவண்ணம் உள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கடந்த 2 மாதங்களில் மட்டும், மொத்தம் 64 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 மாதம், 1 வருடம், 2 வருடங்கள் சிறை தண்டனை பெற்று 24 மீனவர்கள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர்.
இதையடுத்து, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யய வேண்டும், கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும், இந்தியா - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காணவும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத்தரவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 11 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நடத்தி வருகின்றனர்.
தொடர்கிறது ஆர்ப்பாட்டம்
அதன்ஒருபகுதியாக, கடந்த ஆகஸ்ட் 13 அன்று கண்டன ஆர்ப்பாட்டம், ஆகஸ்ட் 15 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று செவ்வாய் கிழமை மீனவர்கள் தங்கக்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக, ராமேஸ்வரத்தில் ஆர்டிஓ தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், இன்று தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்..
இந்த மறியல் போராட்டத்தை வாபஸ் பெற அதிகாரிகள் வலியுறுத்தியும்கூட, இலங்கையில் உள்ள மீனவர்களை விடுவிக்கும் வரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என மீனவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.. பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில், இன்று ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் காலை 10:00 மணிக்கு பின் மீனவர்கள் ரயில் மறியல் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.. இதனால் தங்கச்சிமடத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அடிக்கடி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து அராஜகம் செய்து வருகின்றனர் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வலுவாகவே எழுந்துள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications