இனி ‛புள்ளிங்கோ’ கட்டிங் கிடையாது.. பள்ளி மாணவர்களை திருத்த சலூன் தொழிலாளர் நலச்சங்கம் புதுமுடிவு
ராமநாதபுரம்: கோடை விடுமுறைக்கு பிறகு ஜுன் 10ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் பள்ளி மாணவர்களுக்கு ‛புள்ளிங்கோ’ ஹேர் கட்டிங் செய்யக்கூடாது என ராமநாதபுரம் மாவட்ட முடித்திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் அறிவுரை வழங்கி உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8 ம் தேதி வரை நடந்து முடிந்தது. இதையடுத்து அவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல் 1 முதல் 9ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இறுதி தேர்வு முடிந்த பிறகு ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் ஜுன் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால் பள்ளிகள் திறப்பு ஜுன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று அதிகாரப்பூர்வமாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு! கோடை வெயிலால் ஜுன் 10ல் பள்ளி திறக்கப்படும் என அறிவிப்பு
இதற்கிடையே தான் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஒன்சைட் கட்டிங், பாக்ஸ் கட்டிங், மண்டையில் கோடு போடுவது, ஹேர் கலரிங் உள்ளிட்டவை செய்ய மாட்டோம் என்று முடித்திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட முடித்திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் முத்துமாரி, செயலர் செந்தில் குமார், பொருளாளர் சேகர் கூறுகையில், ‛‛கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் ஜுன் 10ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாக மாணவர்கள் வலியுறுத்தினாலும் கூட ஒன்சைட் கட்டிங், பாக்ஸ் கட்டிங், மண்டையில் கோடு போடுவது உள்ளிட்டவற்றுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என நலச்சங்கத்தினருக்கு அறிவுறுத்தி உள்ளோம்’’ என்றனர்.
இந்நிலையில் தான் ராமநாதபுரம் மாவட்ட முடித்திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் முடிவை பலரும் வரவேற்றுள்ளனர். இவர்கள் எடுத்த முடிவை பிற மாவட்ட முடித்திருத்தும் தொழிலாளர்களும் பின்பற்ற வேண்டும் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications