ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

30 கோடி முட்டை! 3 ஆயிரம் கிலோ! இப்படியெல்லாம் கூட மீன்கள் இருக்கா? இங்க பாருங்களேன் அதிசயத்தை..!

Google Oneindia Tamil News

இராமநாதபுரம் : மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் ஒன்று சிக்கியது. சுமார் 3 ஆயிரம் கிலோ வரை எடையோடு வளரும் இந்த மீன் 30 கோடி முட்டை வரை இடும் தன்மை கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Recommended Video

    30 கோடி முட்டை! 3 ஆயிரம் கிலோ! இப்படியெல்லாம் கூட மீன்கள் இருக்கா?

    மன்னார் வளைகுடா கடற்பகுதியில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை, டால்பின, அணில் மீன், புள்ளி திருக்கை, சூரிய மீன் போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன.

    அரிய வகை மீனான சூரிய மீன், கதிரவ மீன்களும் வாழ்கின்றன. ஆனால் இவற்றை காணக் கிடைப்பது மிகவும், அபூர்வமாகும். இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கியது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

    அதிசய மீன்

    அதிசய மீன்

    இந்நிலையில் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்கள் வலையில் சூரிய மீன் சிக்கியது. இந்த சூரிய மீன் சிறிய வாய், துடுப்பு போன்ற உடலமைப்பு வால்பகுதி இல்லாமல் காணப்படும். பாம்பன் துறைமுகத்திற்கு வந்த இந்த அரிய வகை சூரிய மீனை மண்டபம் மத்திய கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து மீனின் நீளம் அகலம், எடை உள்ளிட்டவைகளை குறித்து கொண்டனர்.

    அரிய வகை சூரிய மீன்

    அரிய வகை சூரிய மீன்

    இந்த மீன் அரிய வகை சூரிய மீன் ஆகும். இது அதிகபட்சமாக 4 அரை அடி நீளமும், 2 ஆயிரத்து 300 கிலோ எடை வரையும் வளரும் தன்மை உடையது. இந்த வகை மீன்கள் இறால், நண்டு, சிப்பிகள், ஆமைகள், ஜெல்லி மீன்கள் ஆகியவற்றை உட்கொள்ளும். இதன் வால் துடுப்பு பகுதி மட்டும் உருமாறி காணப்படும். இந்த வகை மீன்கள் கனடா, கொலம்பியா, கிழக்கு பசிபிக் கடல், தென்ஆப்பிரிக்கா, அர்ஜென்டினா, சிலி, பெரு ஆகிய நாடுகளின் கடல் பகுதியில் அதிகமாக காணப்படும்.

    மிகவும் அரிது

    மிகவும் அரிது

    நமது பாம்பன் கடல் பகுதியில் காணப்படுவது மிகவும் அரிதாகும். 200 மீட்டர் முதல் 600 மீட்டர் ஆழத்தில் வாழக் கூடிய இந்த வகை மீன்கள் ஒரு நாளைக்கு 26 கிலோ மீட்டர் தூரம் நீந்தக் கூடியவை. ஒரு மணி நேரத்தில் 3.2 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தும். இந்த மீன்கள் ஒரு நேரத்தில் 30 கோடி முட்டைகள் இடும். பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய சூரிய மீன் 55 கிலோ எடை கொண்டது.

    மக்கள் ஆர்வம்

    மக்கள் ஆர்வம்

    நான்கு ஆண்டுகளுக்கு பின் பாம்பன் மீனவர்கள் வலையில் சூரிய மீன் சிக்கியுள்ளதாக மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீனை பொதுமக்கள் மற்றும் மீன் வியாபாரிகள் ஆர்வத்துடன் பார்த்தனர். இந்த மீனை சாப்பிட முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

    English summary
    A rare species of sunfish was caught in the nets of Pamban trawlers fishing in the Gulf of Mannar. The fish can weigh up to 3,000 kg and lay up to 30 million eggs, according to researchers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X