7 தமிழர்களை பற்றி தெரியாத போது அரசியல் பேசாதீங்க.. சரத்குமார் பரபரப்பு பேச்சு
தொண்டி: 7 தமிழர்களை பற்றி தெரியாத போது அரசியல் பேசாதீர்கள் என சரத்குமார் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
திருவாடானை ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் எந்த நேரத்தில் தேர்தல் நடைபெற்றாலும் அதில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும். தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும்.

ரஜினியிடம் கேளுங்கள்
வந்தாரை வாழ வைப்போம். ஆள வைக்க விட மாட்டோம். கருத்து சொல்வதற்கு உண்மை வேண்டும். அது என்னிடம் மட்டுமே உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா என்றால் அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

தமிழிசை கருத்து
இன்றைய தலைவர்களில் நான் தான் சிறந்தவனாக இருப்பேன். 7 பேர் விடுதலை குறித்து ரஜினியிடம் கருத்து கேட்ட போது அவர் எந்த 7 பேர், நான் இப்போதுதான் வருகிறேன் என்று கூறியிருந்தார். அப்போது ரஜினி கேள்வியை உள்வாங்கவில்லை அவரிடம் அந்த கேள்வியை இன்னொரு முறை கேட்டிருந்தால் பதில் சொல்லியிருப்பார் என தமிழிசை கூறியுள்ளார்.

மன்னிப்பு
7 தமிழர்களை பற்றி தெரியாதவர்கள் தமிழக அரசியல் பேசக் கூடாது. செல்போன் மூலம் பேசாமல் தைரியமிருந்தால் நேரில் பேசுங்கள். போலீஸ் சட்டையை கழட்டி விடுவேன் என பேசுவது, பின்னர் மன்னிப்பு கேட்பது ஜனநாயகம் அல்ல.

அதிமுகவின் கொ.ப.செ.
நான் கடுமையாக உழைப்பவன். ஒரு காலத்தில் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக உழைத்தேன் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications