கூடை கூடையா நிரம்பிய மீன்கள்.. ஷீலாவை தூக்கிட்டாங்க.. ஏன் தெரியுமா? மகிழ்ச்சியில் ராமநாதபுரம் மக்கள்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில், சீலா மீன்களின் வரத்து அதிகரித்துள்ள நிலையில், மீனவர்கள் மட்டுமல்லாமல், மீன் பிரியர்களும் செம குஷியில் உள்ளனர்.. எனினும், வரப்போகும் சில நாட்களுக்கு தங்களுக்கு லாபம் கிடைக்காது என்கிறார்கள் மீனவர்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தென்கடல் பகுதியில் 90-க்கும் அதிகமான விசைப்படகில் மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்..

மன்னார் வளைகுடா கடல் என்பது அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் வாழும் கடல் பகுதி என்பதால் மீன்களின் வரத்து அதிகமாகவும், வகை வகையான மீன்களும் அதிகமாக சிக்கும்.
பல வகையான மீன்கள்
குறிப்பாக, மாவுலா, விளை மீன், கிளி மீன், பாறை, கணவாய், நண்டு உள்ளிட்டவை அதிகஅளவில் பிடிபடும்.. இந்த மீன்கள் பெரும்பாலும், வியாபாரிகள் மூலம் அனைத்து மீன்களும் எடை போடப்பட்டு கம்பெனிகளுக்கு கொண்டு செல்லப்படும்.. இதில் பல நேரங்களில் மாவுலா மீன்களும், கணவாய் மீன்களும் அதிகஅளவில் பிடிபடும்.
வழக்கமாக இங்கு, பிப்ரவரி முதல் மார்ச் வரை சீலா மீன்கள் சீசன் என்பார்கள்.. சாயல்குடி அருகே வாலிநோக்கம், கீழமுந்தல், மேலமுந்தல், நரிப்பையூர், மாரியூர், ஒபிலான், ரோஜ்மாநகர் உள்ளிட்ட இடங்களில் பிடிக்கப்படும் சீலா மீன்கள், கூடுதல் ருசியாகவும், முதல் தரமாகவும் இருக்குமாம்.. அதனால்தான், வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு ஏராளமானோர் ஷீலா மீன்களை வாங்கி செல்வார்கள்..
ஷீலாவுக்கு கிடைக்கும் கிராக்கி
2 முதல் 4 கிலோ எடை கொண்ட மீன்கள் கிலோ ரூ.600க்கும், 5 முதல் 10 கிலோ உள்ள மீன்கள் ரூ.700க்கும், கடற்கரையில் வைத்தே விலை நிர்ணயம் செய்து விற்கப்படுவது வாடிக்கையாகும். இதுவே 10 கிலோ முதல் 19 கிலோ வரை எடை கொண்ட சீலா மீன்கள் என்றால், ரூ.850 வீதம் உரிய முறையில் பேக்கிங் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுமாம்.. அதிகபட்சமாக 35 கிலோ வரையுள்ள சீலா மீன்கள் இங்கு கிடைக்கும் என்கிறார்கள் மீனவர்கள்.
இந்நிலையில், தற்போது சீலா மீன்கள் அதாவது வஞ்சிரம் மீன்களின் சீசன் துவங்கியிருக்கிறது.. இதனால் ஒவ்வொரு விசைப்படகிற்கும் பல டன் கணக்கில் பெரிய அளவில் இருக்கும் சீலா மீன்கள் சிக்குவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்... ஒவ்வொரு படகிலும் டன் கணக்கில் ஷீலா மீன்கள் குவிந்துள்ளதாம்.. ஒரு மீன் 4 கிலோ எடை வரை இருப்பதால், மீனவர்கள் குஷியில் உள்ளனர்.
வஞ்சிரம் மீனால் உச்சக்கட்ட குஷி
ஆனால், அதிக வரத்து காரணமாக, கிலோ ரூ.800 ரூ.700 வரை விற்பனை செய்ய வேண்டிய மீன்களை ரூ.400 மட்டுமே குறைத்து, பொதுமக்கள் செல்கிறார்களாம். இதனால், தங்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுவதாக மீனவர்கள் கூறுகிறார்கள். மீன்களின் வரத்து குறைந்தால்தான் விலை ஏற்றம் அடையும் என்கிறார்கள். ஆனால், வஞ்சிர மீன் பிரியர்களோ, தற்போது உச்சக்கட்ட குஷியில் இருக்கிறார்களாம்...!!!












Click it and Unblock the Notifications