Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் இலங்கை அமைச்சர்- சிங்கள படை மீண்டும் அட்டூழியம்! மேலும் 16 தமிழக மீனவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் டெல்லியில் முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது; மேலும் தமிழக மீனவர்களின் 3 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை மிக மோசமான பொருளாதார பேரழிவில் சிக்கித் தள்ளாடுகிறது. இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி மிக கடுமையாக உயர்ந்து பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.

இந்தியாவிடம் கடன்

இந்தியாவிடம் கடன்

இப்படியான சூழலில் இந்தியாவிடம் பெருமளவு கடனுதவி பெறுவதற்காக இலங்கை அமைச்சர்கள் அடுத்தடுத்து டெல்லியில் முகாமிடுகின்றனர். அமைச்சர் பசில் ராஜபக்சேவை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்.

டெல்லியில் இலங்கை அமைச்சர்

டெல்லியில் இலங்கை அமைச்சர்

டெல்லியில் ஜீ.எல். பீரிஸ் முகாமிட்டிருக்கும் நிலையில் இலங்கையில் சீனா ஆதரவு அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 105 மீன்பிடி படகுகளை ஏலம் விடுவதற்கான பணிகளை தொடங்கி உள்ளார். இத்தனைக்கும் தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் ஏலம் விடும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் தமிழக மீனவர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

16 மீனவர்கள் கைது

16 மீனவர்கள் கைது

இந்நிலையில் அடுத்த பேரிடியாக, பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருப்பதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.

மத்திய அரசு கண்டிக்குமா?

மத்திய அரசு கண்டிக்குமா?

டெல்லியில் இலங்கை அமைச்சர் முகாமிட்டிருக்கும் போதே தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவது, தமிழக மீனவர்களை கைது செய்வது என்கிற சிங்கள அரசின் அட்டூழியம் தொடருகிறது. ஆனால் இதுவரை மத்திய பாஜக அரசு இலங்கை அரசை கிஞ்சித்தும் கூட கண்டிக்காதது தமிழர்களிடையே கடுமையான விசனத்தை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபாவில் தமிழர் குறித்து பேசிய பிரதமர் மோடியும் கூட இலங்கையை ஒருவார்த்தை கூட கண்டிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+