மாமனாரின் 70வது பிறந்த நாளை அசத்திய மருமகள்.. ராமநாதபுரத்தை நெகிழவைத்த சம்பவம்.. வீடியோ

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம் ; மாமனாரின் 70வது பிறந்த நாளுக்கு மருமகள் 70 வகை உணவு வகைகளை சமைத்து அசத்தி உள்ளார். இந்த ருசிகர சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடந்துள்ளது,

Recommended Video

    மாமனாருக்கு 70-தாவது பிறந்த நாள்.. 70 வகையான உணவுப் பதார்த்தங்களை செய்து அசத்திய மருமகள்

    திருமணம் ஆனபின்னர் மாமனார் மாமியாரை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு தனது அம்மாவையும் அப்பாவையும் தூக்கிவைத்துக் கொண்டு இருக்கும் மருமகள் அதிகம் இப்போது இருக்கிறார்கள். இதேபோல் அம்மாவின் பேச்சைக்கேட்டு மாமியார் வீட்டை மட்டமாக நினைக்கும் ஆண்களும் இருக்கிறார்கள்.

    அதாவது மாமியார் கொடுமை, மருமகள் கொடுமை இரண்டில் ஏதாவது ஒரு வகை பாதிப்பு இல்லாத வீடுகள் அபூர்வம் தான் இந்த இப்படியான சூழலில் சில குடும்பங்கள் கூட்டுக்குடும்பமாக ஒற்றுமையாக வாழ்வதும் நடக்கிறது.

    70வது பிறந்த நாள்

    70வது பிறந்த நாள்

    அப்படியான ஒரு பாசமுள்ள குடும்பம் தான் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள கணேசன் குடும்பம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நகைக் கடை வைத்திருப்பவர் கணேசன். இவருக்கு இன்று 70வது பிறந்த நாள் என்பதால், இவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க மருமகளும் குடும்பத்தினரும் விரும்பினார்கள்.

    கொடுத்த பரிசு

    கொடுத்த பரிசு

    என்ன செய்யலாம் என்று யோசித்த மருமகள் எழுபது வகையான சைவ உணவுகளை அவருக்கு தயார் செய்ய விரும்பினார்.அதை கணேசனின் குடும்பத்தின அனைவரும் ஏற்றுக்கொண்டு இணைந்து செய்தனர். ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தது.

    உதவிய குடும்பம்

    உதவிய குடும்பம்

    குடும்பத்தினர் விரும்பியபடி சமையல் அற்புதமாக செய்யப்பட்டது. அவருக்கு உணவுகளை பரிமாறினார் மருமகள். இதை பார்த்து வாயடைத்துப்போன மாமானார், உணவுகளுடன் உட்கார்ந்து இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நீண்ட மகிழ்ச்சி

    நீண்ட மகிழ்ச்சி

    தற்போது உள்ள குடும்ப சூழ்நிலையில் முதியோர்களை வைத்து ஒருவேளை உணவு கொடுக்க பல மருமகள்கள் அல்லது மருமகன்கள் விரும்புவது இல்லை முதியோர் இல்லத்திற்கு தள்ளப்படும் நிலையே இருக்கிறது. இந்த நிலையில், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து, 70 வயது கடந்த பெரியவருக்கு மருமகளின் இந்த உபசரிப்பு மிகப்பெரிய மகிழ்ச்சியை நீண்ட காலத்த்திற்கு தரும். இந்த செயல் பெரிதும் பாராட்டை பெற்றுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+