இந்து பெண்களே.. ஆ.ராசாவை தண்டிக்கனும்.. கலகம் தூண்டும் பாஜக வேலூர் இப்ராஹிம்
ராமநாதபுரம்: இந்துக்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய திமுக எம்பி ஆ.ராசாவை இந்து பெண்கள் செருப்பால் அடிக்க வேண்டும் என பாஜக தேசிய சிறுபான்மையினர் பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் கூறினார்.
நீலகிரி தொகுதியின் திமுக எம்பியும் முன்னா மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசிய கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆ.ராசா தன்னுடைய உரையில், "கிறிஸ்துவராகவோ இஸ்லாமியராகவோ பெர்சியராகவோ இல்லாவிட்டால் நீ இந்துதான் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்.

ஆ.ராசா பேச்சு
சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவராக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்க எழுப்பினால்தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்." என்றார்.

வேலூர் இப்ராஹிம்
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்ததில் இருந்து இந்துக்களுக்கும் இந்துக்களின் நம்பிக்கைக்கும் அவமானம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்களை விபச்சாரி மகன் என்று தரம் தாழ்ந்து கேடுகெட்ட முறையில் பேசி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

செருப்பால் அடிங்க
இதுபோல் பேசிய ஆ.ராசாவை இந்து பெண்கள் செருப்பால் அடித்தால் கூட தகும். முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா கோவில் கோவிலாக செல்கிறார். அவர் இந்து நம்பிக்கை கொண்டவராகதான் இருக்கிறார் அப்போ அவருக்கும் இது பொருந்துமா என்பதை ஆ.ராசா விளக்கமளிக்க வேண்டும்.

தண்டிக்க வேண்டும்
இந்து என்பது ஒரு மதத்தின் பெயர் அல்ல. அது வாழ்வியல் முறை. அது ஒரு வாழ்வியல் கலாச்சாரம். இதையெல்லாம் புரிந்து கொள்ளாத கேடுகெட்ட அருவருப்பான அரசியல் பேசும் ஆ.ராசா போன்றவர்களை கடுமையான தண்டனைக்கு ஆளாக்க வேண்டும்." என்று கூறினார். வேலூர் இப்ராஹிமின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
எகிறும் எதிர்பார்ப்பு! ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை! -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம்











Click it and Unblock the Notifications