திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக அரசுக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆகியோர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், பொன்னாரும் தன் பங்கிற்கு த.வெ.க. அரசை வலுவாக சாடியுள்ளார்.. தமிழக வெற்றிக் கழக அரசு எம்.எல்.ஏ.க்களை விலை பேசி நடத்தி வருவது குதிரை பேர அரசியல் அல்ல, அது ஒரு கழுதை பேர அரசியல் என்று பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக அரசியல் களம் இப்போது வரலாறு காணாத பரபரப்பில் சிக்கித் தவித்து வருகிறது.. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்ததில் இருந்தே பல்வேறு அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.

Thirumavalavan Pon Radhakrishnan TVK RSS Tamil Nadu Politics Political Controversy TVK Alliance BJP Tamil Nadu

குதிரை பேரம் தவெகவில்

குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தங்கள் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்திருப்பது பெரும் புயலை கிளப்பியுள்ளது.. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தை கையில் எடுத்து, தவெக அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியிருந்தார்.. தமிழ்நாட்டில் குதிரை வேகத்தில் குதிரை பேரம் நடந்து வருவதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மிக நீண்டதொரு பதிவை வெளியிட்டு, தவெகவின் செயல்பாடுகளை 2 நாட்களுக்கு முன்பே விமர்சித்திருந்தார்.


முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, பெரும்பான்மை இல்லாத ஒரு சூழலில் ஆட்சியை தக்க வைக்க எத்தகைய வேலைகளில் இறங்கியுள்ளது என்பதை மு.க.ஸ்டாலின் சில முக்கிய காட்சிகளாக விவரித்து அம்பலப்படுத்தியிருந்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படியாவது தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அதிமுகவின் ஒரு குறிப்பிட்ட அணியை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பதற்கான விலை பேசும் வேலைகள் தடல்புடலாக நடக்கிறது, அமமுக உறுப்பினரையும் ஒரு கொசுறு போல தவெக அரசு தங்களுக்கு சாதகமாக வாங்கியிருக்கிறது, மக்கள் இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்ப்பதற்காகவா உங்களுக்கு வாக்களித்தார்கள்? என்றெல்லாம் ஸ்டாலின் காட்டமான கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அதேபோல, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் தவெக அரசை நோக்கி அதிரடி கேள்விகளை முன்வைத்திருந்தார்.

தவெக அரசுக்கு கேள்வி

"தவெக அரசுக்கு அதிமுகவினர் எந்தவித நிபந்தனையுமின்றி வெளிப்படையாக ஆதரவு அளித்தால் மட்டுமே, அங்கு குதிரை பேரம் நடக்கவில்லை என்பதை பொதுமக்கள் நம்புவார்கள்.. அதனால் தமிழகத்தில் குதிரை பேர அரசியல் எதுவும் இல்லை என்பதை முதலமைச்சர் விஜய் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மிக மிக முக்கியமாக, முகத்தை மூடிக்கொண்டு முதலமைச்சர் விஜய் வீட்டுக்கு காரில் சென்ற நபர் யார் என்ற உண்மையையும், அதன் பின்னணியில் உள்ள ரகசியத்தையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இப்படி அரசியல் களம் தகித்து கொண்டிருக்க, இந்த சூழ்நிலையில், இந்த குதிரை பேர விவகாரத்தில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்..


திருமாவளவன் ஆர்எஸ்எஸின் செல்லப்பிள்ளை

"தேர்தலின்போது உறுதி கொடுத்த நிலைப்பாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் முற்றிலும் விலகி விட்டது, முந்தைய திமுக ஆட்சியின் நீட்சியாக தான் இந்த தவெக அரசை பார்க்க முடியும்.. மக்கள் வேண்டி விரும்பிய மாற்றத்தை தவெக அரசு தங்களுக்கு தரவில்லை, எம்எல்ஏக்களை விலை பேசி தவெக தற்போது நடத்தி கொண்டிருப்பது, குதிரை பேர அரசியல் அல்ல, அது ஒரு கழுதை பேர அரசியல்.

எழுச்சியோடு தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வந்த இளைஞர்களும், பொதுமக்களும், பெண்களும், தாங்கள் எதிர்பார்த்த அரசு இது இல்லை என்று கூறி இந்த அரசை தூக்கி எறியவும் தயங்க மாட்டார்கள். இதை ஒரு எச்சரிக்கை மணியாக தவெக தலைமை உணர வேண்டும்..

கடந்த காலங்களில் முதலமைச்சர் விஜயை ஆர்எஸ்எஸின் செல்லப்பிள்ளை என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். ஆனால் தற்போது விஜயின் அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ளதால், திருமாவளவனை ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளையாக தான் அனைவரும் பார்க்கிறார்கள்" என்றெல்லாம் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+