ராமநாதபுரத்தில் 33 வார்டுகளில் 17 வார்டுகளில் பெண்கள் களம்.. சூடுபிடிக்கும் நகர்ப்புற தேர்தல்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் நகராட்சி உள்பட மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 17 வார்டுகளில் பெண்கள் போட்டியிடுகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுதாக்கல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 17 வார்டுகள் பெண்களுக்கும் 15 வார்டுகள் பொது வார்டுகளாகவும் 1 வார்டு எஸ்சி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வார்டுகள்
பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள் 4,7, 11, 14, 17, 19, 22, 23, 25, 27, 29, 32 மற்றும் 33 ஆகிய 16 வார்டுகள் பெண்கள் போட்டியிடும் வார்டுகளாக உள்ளன. அது போல் பொது வார்டுகளாக 5,7,10, 12, 13,15,16, 18,20, 21, 24, 30 மற்றும் 31 ஆகிய வார்டுகள் உள்ளன. எஸ்.சி. மகளிர் பிரிவினருக்கு 26-வது வார்டும்,எஸ்.டி. பொது பிரிவினருக்கு 28-வது வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பழைய பதவி
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள் நகர்ப்புற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் அவர்கள் ஊரக உள்ளாட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒரு வேளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் பழைய பதவியிலிருந்து நீக்கப்படுவர்.

இருவர் மட்டுமே
அது போல் வாக்கு சேகரிக்க வேட்பாளர்களுடன் இருவருக்கு மேல் செல்லக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே ஆன்லைன், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்வது குறித்து கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். வேட்புமனு தாக்கல் பணி நடந்து வருகிறது. கட்சிகளும் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றன.
-
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications