"பிஞ்சிலேயே".. மைனர் சிறுவன் மிஸ்ஸிங்.. சேலம் போலீஸே ஷாக் ஆயிடுச்சே.. இப்ப அந்த பொண்ணு கர்ப்பமாம்

மைனர் சிறுவனை கடத்தி சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

சேலம்: நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக ஏராளமானோர் கைதாகிவரும் நிலையில், ஒரு இளம்பெண்ணே போக்சோவில் கைதாகி உள்ளது, அதிர்ச்சியையும், மிகப்பெரிய கவலையையும் ஏற்படுத்தி வருகிறது..!!

அந்த மாணவன் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டில் படித்து வந்தான்.. 17 வயதாகிறது.. கடந்த ஏப்ரல் 6ம் தேதி காலேஜ் சென்றவர் திடீரென மாயமானார்.

நீண்ட நேரமாகியும் வீட்டுக்கும் வரவில்லை.. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் மகனை தேடினர்.. அப்போதும் கிடைக்கவில்லை..

 ஹேபியஸ் கார்பஸ்

ஹேபியஸ் கார்பஸ்

அதனால், மகனை காணவில்லை என்று கருப்பூர் போலீசில் புகார் அளித்தனர்... போலீசாரும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், அந்த மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை.. இதனால் செய்வதறியாது தவித்த பெற்றோர், கோர்ட்டுக்கு சென்றார்கள்.. ஹேபியஸ் கார்பஸ் மனுவையும் தாக்கல் செய்தனர்... அதற்கு பிறகுதான் முறையான விசாரணையே ஆரம்பமானது.. அந்த மாணவனுடன் நட்பாக இருந்தது யார்? என்று போலீசார் விசாரிக்க தொடங்கினர்... முதலில் நண்பர்களிடம் விசாரித்தபோது, அந்த மாணவன் யாரிடமும் அதிகமாக பேசமாட்டான் என்றனர்.. இதனால் மாணவனை பற்றிய துப்பு கிடைக்காமல் போலீசார் குழம்பினர்..

 வயசு 20

வயசு 20

பிறகு மேலும், தீவிர விசாரணையை மேற்கொண்டபோதுதான், மாணவன் இருக்கும் இடம் தெரியவந்தது.. கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரில், அந்த மாணவன் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.. அதனால், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.. அங்கு சென்றபோதுதான், அவருடன் இளம்பெண் ஒருவர் இருப்பதை பார்த்து போலீசாருக்கே அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து 2 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற விசாரணை நடத்தியபோது பல்வேறு தகவல் வெளியானது.

 ஜஸ்ட் 17

ஜஸ்ட் 17

வயது வேறுபாடு இருந்தாலும், 2 பேருமே காலேஜில் ஒன்றாக படித்துள்ளனர்.. அப்போது அந்த மாணவனின் அழகில் மாணவி மயங்கி விழுந்து, கடைசியில் காதலிலும் விழுந்துவிட்டார்.. ஒருகட்டத்தில் திருமண ஆசை காட்டியதுடன், எங்காவது போய் கல்யாணம் செய்து கொண்டு வாழலாம் என்று சொல்லி உள்ளார்.. அந்த நேரத்தில் மாணவனுக்கு 17 வயதுதான் ஆகியிருந்தது.. அதாவது 18 வயது முடிய இன்னும் 3 மாதங்கள் இருந்தது.. ஆனாலும், காதல் கண்ணை மறைக்கவும், கடந்த ஏப்ரல் மாதமே இவர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

 3 மாச கர்ப்பம்

3 மாச கர்ப்பம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில், தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.. பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு அந்த வீட்டில் குடும்பமும் நடத்தியுள்ளனர்.. 2 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண்தான், மாணவனை கடத்தி சென்று திருமணம் செய்தது உறுதியானதையடுத்து, கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குழந்தை திருமணம், சிறுவனை கடத்திச் சென்று உல்லாசமாக இருந்ததால் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்துள்ளனர்... இப்போது விஷயம் என்னவென்றால், அந்த பெண் 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறாராம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+