மேட்டூரில் விநாயகர் சிலை கரைக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்
சேலம்: மேட்டூர் அருகே தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது நீரில் மூழ்கிய இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் மேட்டூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். சிறுவர்கள் சிலைகளை இன்றைய தினமே அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற போது இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் பெயர் சந்தோஷ்,14, நந்தகுமார், 14 என்பதாகும். பள்ளி விடுமுறை தினமான இன்று விநாயகர் சிலையை நீரில் கரைக்கச் சென்ற அந்த மாணவர்கள் கால் தவறி தண்ணீருக்குள் விழுந்து உயிரிழந்தனர். மாணவர்கள் உயிரிழப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications