கள்ளக்குறிச்சி அருகே இன்னொரு நிஜ ஜெய்பீம்?போலீஸ் விசாரணைக்கு அழைத்துப் போன மலைக்குறவர்கள் கதி என்ன?
சேலம்: கள்ளக்குறிச்சி அருகே போலீசாரால் விசாரணைக்கு என அழைத்துச் சென்ற மலைக்குறவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் பழங்குடியினர் குறித்து எழுதி வரும் பத்திரிகையாளர் கிருத்திகா சீனிவாசன்.
Recommended Video
நடிகர் சூர்யா நடித்து பெரும் விவாதத்துக்குள்ளாகி இருக்கிறது ஜெய்பீம் திரைப்படம். இத்திரைப்படத்தின் கருவே போலீஸ் கஸ்டடியில் இருளர் அல்லது குறவர் எப்படி எல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார் என்பதுதான்.

ஜெய்பீம் படம் உண்மை சம்பவம்
இது சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த நிஜ சம்பவம். ராஜாக்கண்ணு என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடலை போலீசார் வேறு இடத்தில் வீசிவிட்டனர். இதற்கு நீதி கேட்டு பேராசிரியர் கல்யாணி மூலம் முன்னாள் நீதிபதி சந்துரு வழக்கை நடத்தி காவல்துறையினருக்கு தண்டனை பெற்றுத்தந்தார். இதுதான் படத்தின் கதை. இதேபோல் போலீஸ் லாக்கப் மரணங்களை வெளிப்படுத்தக் கூடிய விசாரணை போன்ற படங்களும் வெளியாகி இருக்கின்றன.

போலீஸ் கஸ்டடியில் 5 மலைக்குறவர்கள்
இப்போது ஜெய்பீம் படம் பேசுபொருளாகி இருக்கும் இந்த நிலையிலும் அதேபோன்ற ஒரு சம்பவம் கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்துள்ளதைதான் பத்திரிகையாளர் கிருத்திகா சீனிவாசன். இன்று வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கடந்த ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமையன்று கள்ளக்குறிச்சி போலீசாரால் 5 மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டனர். எந்த ஒரு பிடிவாரண்ட்டோ அல்லது உறவினர்களுக்கு தகவலோ சொல்லாமலே 5 மலைக்குறவர்களும் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

போலீஸ் விடுவிப்பதாக சொன்ன 2 பேர் கதி என்ன?
இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது, அழைத்துச் செல்லப்பட்ட 5 பேரின் கைரேகைகள் ஒரு திருட்டு சம்பவத்தில் ஒத்துப் போகின்றன. அவர்களைத் தவிர எஞ்சிய 2 பேரையும் செவ்வாய்க்கிழமை அனுப்பிவிடுவோம் என்றனர். ஆனால் இதுவரை எஞ்சிய 2 மலைக்குறவர்களையும் போலீசார் விடுவிக்கவில்லை. அவர்கள் 2 பேரின் கதி என்ன என்பதும் தெரியவில்லை என கீர்த்திகா சுப்பிரமணியம் பதிவிட்டுள்ளார்.

போலீஸ் திருந்தவே மாட்டார்களா?
இத்தனைக்கும் ஜெய்பீம் திரைப்படத்தில் போலீசார் எத்தனை கொடூரமாக நடந்து கொண்டனர் என்பதை காட்டியதால் போலீஸ் மீது கடும் கோபத்தை பார்வையாளர்களிடம் அது ஏற்படுத்தியிருக்கிறது. போலீசாராக நடித்த நடிகர்கள் தங்களது பேட்டிகளிலேயே இதனை தெரிவித்தும் இருக்கின்றனர். ஆனால் சமூகத்தில் இப்படி ஒரு தாக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் கூட உணர்ந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் போலீசார் தமது அடக்குமுறை அப்பாவிகள் மீது காட்டுவதைத்தான் மன்னிக்க முடியாது என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications