தீவிரமாகும் ஜெய்பீம் விவகாரம்.. போலீசில் பரபரப்பு புகார்.. வன்னியர்கள் பற்றி அவதூறு என குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர், நடிகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒகேனக்கல் காவல் நிலையத்தில் பாமக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ஜெய் பீம் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் கடந்த 2ம் தேதி வெளியானது.

இத்திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை பற்றி அவதூறாக திரைப்பட காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும், சில காட்சிகளில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மோசமான, அராஜகமான முறையில் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை கொடுமைப்படுத்துவது போல் திரைப்படத்தில் காட்சிப்படுத்தியதாகவும், ஒரு தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊழல் ஒழிப்பில் உறுதியாக நின்ற அதிகாரி..நல்லம்ம நாயுடு மறைவு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..நேரில் அஞ்சலி.

அவதூறு காட்சிகள்

அவதூறு காட்சிகள்

இந்த நிலையில்தான், ஜெய்பீம், திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை பற்றி அவதூறாக காட்சி அமைத்து இயக்கிய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி பென்னாகரம் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில் ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசில் புகார்

போலீசில் புகார்

வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் அவதூறாக திரைப்பட காட்சி அமைந்துள்ளது என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. புகார் அளித்தபோது, பாட்டாளி மக்கள் கட்சி பென்னாகரம் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கே. பி. முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் வெண்ணிலா அருள்மொழி மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

 பாமக வழக்கறிஞர் பாலு

பாமக வழக்கறிஞர் பாலு

இதனிடையே, ஜெய் பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நுழைவு வாயிலில் பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இழப்பீடு தொடர்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து வரும் பதிலை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த படத்தின் மூலமாக பல கோடி ரூபாய் சம்பாதித்தூள்ளார்கள். வழக்கில் கிடைக்கும் இழப்பீடு முழுவதையும் உண்மையில் பாதிக்கப்பட்ட பார்வதிக்கு 5 கோடி ரூபாய் வழங்குவோம் என தெரிவித்தார்.

சூர்யா புரிந்து கொள்ளவில்லை

சூர்யா புரிந்து கொள்ளவில்லை

தற்போது வரை படக்குழு தரப்பிலிருந்து எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை. படத்துறையினர் எங்களோடு இணக்கமாக இருக்கும்போது, சூர்யா இதை எதிர்கொள்ளும் விதம் வேறுவிதமாக உள்ளது. எங்கள் உணர்வுகளை இயக்குனர், நடிகர் சூர்யா புரிந்து கொள்ளவில்லை என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+