ஆ.. ஆபத்து.. டெம்போ டிரைவர்கள் அரசு பஸ் ஓட்டுறாங்க! எங்களுக்கு ஏமாற்றம்.. தொழிற்சங்கத்தினர் புகார்
சேலம்: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக டெம்போ ஓட்டுநர்களை வைத்து அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக அண்ணா தொழிற்சங்க நிர்வாகி குற்றம்சாட்டி உள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று முதல் தொடங்கி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் சிஐடியு, அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தினர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தாலும் திமுகவின் தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சேலம் மெய்யனூரில் உள்ள போக்குவரத்து பனிமனையில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தினர் நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேட்டியளித்த அண்ணா தொழிற்சங்க தலைவர், "எங்களுடைய கோரிக்கை என்பது பொங்கல் பண்டிகை சமயத்தில் பொதுமக்கள் பாதிக்காமல் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். இதை நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உடனடியாக எங்களை அழைத்து பேசுகிறோம் என்று அறிவிப்பு கொடுத்து உள்ளார்.
இன்று 50 சதவீத போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. 50 சதவீத தொழிலாளர்களை வைத்து 100 சதவீதம் பேருந்துகளை இயக்குகின்றனர். மீதம் தனியார் பேருந்து ஓட்டுநர்கள், கல்லூரி பேருந்துகளை ஓட்டுபவர்கள், அறைகுறை ஓட்டுநர்கள், டெம்போ ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்குகிறார்கள். இது பயணிகளின் பாதுகாப்புக்கு உகந்தது இல்லை. அரசு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்.

அதிமுக ஆட்சியில் 21 சதவீதம் நாங்கள் கொடுத்தோம். அதை நீங்கள் குறைவு என்று சொன்னீர்கள். ஆனால், இப்போது நாங்கள் கொடுத்ததையாவது கொடுங்கள். அதை உடனடியாக கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். ஆனால், பேச்சு வார்த்தைக்கே எங்களை அழைக்கவில்லை. எங்களை மதிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்களுடன் கூட்டணியில் சிஐடியு தொழிலாளர்களே எங்களுடன் இணைந்து போராடுகிறார்கள். தொழிலாளர்கள் கோரிக்கை 100 நாளில் நிறைவேற்றப்படும் என்றார்கள். ஆனால், எங்கள் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இதுவரை காதுகொடுத்து கேட்கவில்லை.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பட்டை நாமம் என்பதை இந்த பேச்சுவார்த்தை தோல்வி மூலம் தெளிவுபடுத்தி உள்ளார்கள். உடனே இதை மாற்றி அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து எங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும். இன்று பேருந்துகள் ஓடுகின்றன. ஆனால், எல்லா பேருந்துகளும் காலியாகவே செல்கின்றன. 50 சதவீதம் தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. இதுதான் உண்மை. எனவே அரசு ஈகோ பார்க்காமல் எங்களை அழைத்துப் பேசவேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications