சேலம் அருகே நள்ளிரவில் டவுசருடன் சுற்றும் முகமூடிக் கொள்ளையர்கள்.. கேமராவை பார்த்து தந்த ரியாக்சன்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியில் முகமூடிக் கொள்ளையர்கள் டவுசர் மட்டும் அணிந்து சுற்றும் காட்சிகள் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொள்ளையர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொள்ளை சம்பவம் நடக்காமல் இருக்க போலீசார் அடிக்கடி ரோந்து வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

டவுசர் மட்டும் அணிந்த கோலத்தில் கொள்ளையர்கள் முகமுடி அணிந்தபடி ஊருக்குள் வந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கொள்ளையடிக்க செல்லும் போது, தப்பிக்க ஏதுவாக சட்டை அணியமால் கொள்ளையர்கள் செல்கிறார்கள். கடந்த பிப்வரி மாதம் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் நள்ளிரவில் ஒவ்வொரு வீடாக கதவுகளைத் தட்டி தனியாக வெளியே வரும் பெண்களைக் குறிவைத்து நகையைப் பறிப்பது... அல்லது வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயல்வது என டவுசர் கொள்ளையர்கள் அட்டூழியம் இருந்தது. முன்னனதாக தாம்பரம் பகுதியிலும், திருப்பூர் பகுதியிலும் சம்பவங்கள் நடந்துள்ளன.

salem crime

அந்த வகையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியில் முகமூடிக் கொள்ளையர்கள் டவுசர் மற்றும் அணிந்து சுற்றியுள்ளனர். தங்கவேல் என்பவரது வீட்டில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்கள் , அங்கு திடீரென அலாரம் அடித்ததால் திரும்பி சென்றுள்ளனர். சிசிடிவி கேமரா இருப்பதையும் கொள்ளையர்கள் பார்த்து திடுக்கிட்டுள்ளனர்.

இது தொடர்பாக காட்சிகள் அந்த பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொள்ளையர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொள்ளை சம்பவம் நடக்காமல் இருக்க போலீசார் அடிக்கடி ரோந்து வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதுபற்றி போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே சேலம் ஆட்டையாம்பட்டி அருகே சீரகாபாடி பகுதியை சேர்ந்த 65 வயதாகும் கந்தசாமி விவசாயி ஆவார். இவரது உறவினர் வீட்டு திருமணத்துக்கு கணேசன் சென்றுள்ளார். திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த கணேசன், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் ஆகியவை திருட்டு போனது. இந்த சம்பவம் தொடர்பாக கணேசன் அளித்த புகாரில் ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+