காவிரியில் பெரும் வெள்ளம்- மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.33 லட்சம் கன அடிநீர் வெளியேற்றம்!
சேலம்: மேட்டூர் அணை நிரம்பியதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1.33 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் கடல் போல வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. காவிரி ஆறு பாயும் 11 மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் நீராடவும் துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி ஆறு நீர்பிடிப்புப் தென்மேற்கு பருவமழை விடாமல் கொட்டித் தீர்த்து வருகிறது. கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்ததால் கடந்த 10 நாட்களாக அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இதனால் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வார காலமாக காவிரியில் நீர்வரத்து மிக அதிகமாக இருந்து வருகிறது. தற்போது மேட்டூர் அணையானது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை தற்போது 42-வது முறையாக முழுமையாக நிரம்பி உள்ளது.
இதையடுத்து 16 கண் மதகுகள் வழியாக நேற்று முதல் அணை நீர் திறந்துவிடப்படுகிறது. முதலில் வினாடிக்கு 26,000 கன அடிநீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து நேற்று இரவு முதல் 1.23 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு 1.33 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டபடி கரைபுரண்டோடுகிறது. காவிரி ஆற்றில் தலை ஆடி கொண்டா இன்று வருகை தந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில் ஆற்றில் நீராட செல்லும் பாதைகள் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காவிரி ஆறு பாயும் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் கரையோரங்களின் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்தும் செல்லப்பட்டுள்ளனர். சேலம் தொடங்கி கடலூர் வரை மொத்தம் 11 மாவட்டங்கள் வழியாக காவிரி ஆறு பாய்ந்து கடலில் கலக்கிறது. அனைத்து மாவட்டங்களில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க, துணி துவைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications