'துரோகமே' உன் பெயர் கர்நாடகா? கதறுதே காய்ந்து போன காவிரி டெல்டா.. இன்று முதல் மேட்டூர் அணை மூடல்?

Subscribe to Oneindia Tamil

சேலம்: காவிரி நதிநீரை கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு திறந்துவிட மறுப்பதால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டாவுக்கான பாசன நீர் திறப்பை இன்று முதல் தமிழ்நாடு அரசு நிறுத்தக் கூடும் என்கிற அச்சம் உருவாகி உள்ளது.

காவிரி டெல்டா பாசனங்களின் நீர் ஆதாரமே மேட்டூர் அணைதான். கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் தங்கு தடை இல்லாமல் வந்து கொண்டிருந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண்ராஜ சாகர் அணை கட்டப்பட்டது. கர்நாடகாவின் இந்த அத்துமீறல் காரணமாக காவிரி நதிநீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

Cauvery: Mettur dam to be close from today?

கர்நாடகா போராட்டம்- பிடிவாதம்: தற்போது கிருஷ்ணராஜ சாகர் அணையில் 100 அடி நீர் இருப்பு உள்ளது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி 3,000 கன அடிநீரை கர்நாடகா திறக்கவில்லை. கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள், ஒரு சொட்டூ நீரைக் கூட தமிழ்நாட்டுக்கு திறக்க விடாமல் போராடி வருகின்றனர். ஏற்கனவே மண்டியா பந்த், பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் போராட்டங்கள் நடத்தினர். கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் ஒரு மாதத்தை கடந்தும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் இருந்து சொற்ப நீர்தான் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணை நிலவரம்: இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் வெகுவாக குறைந்து அணையின் நீர் மட்டம் மளமளவென சரிந்துவிட்டது. மேட்டூர் அணைக்கான நீர் வரத்து வெறும் 139 கன அடியாக மட்டும் இருந்தது. இதுவும் 122 அடியாக தற்போது குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31.75 அடியாகத்தான் இருந்தது. தற்போது 31.30 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் மொத்தம் 8.22 டிஎம்சி நீர்தான் உள்ளது. மேட்டூர் அணையில் 9.22 டிஎம்சி நீர் குடிநீர், மீன்வள பாதுகாப்புக்காக தேக்கிவைக்கப்பட வேண்டும்.

மேட்டூர் அணை நீர் திறப்பு நிறுத்தம்?: மேலும் காவிரி டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படுகிற நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது வினாடிக்கு 2,000 கன அடி நீர் மட்டுமே காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படுகிறது. இதனால் தற்போதைய குறுவை சாகுபடியும் அடுத்து வரும் சம்பா சாகுபடியும் பெரும் கேள்விக்குள்ளாகி இருக்கின்றன. இதனிடையே கர்நாடகாவில் இருந்து போதுமான நீர் திறக்கப்படாத நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கான நீர் திறப்பு இன்று முதல் நிறுத்தப்படலாம் என்ற அச்சமும் காவிரி டெல்டா விவசாயிகளிடம் உருவாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+