Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40 வருடங்களாக நடக்கவில்லை; நடத்திக் காட்டிய ஸ்டாலின்! ஜருகுமலை மக்கள் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சேலம்: கடந்த 40 ஆண்டுகளாக நியாய விலைக் கடை கேட்டுப் போராடி வந்த ஜருகுமலை மக்களின் விருப்பத்தை நிறைவேற்றித் தந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதிக்குள் இருக்கிறது ஜருகுமலை. இது ஒரு மலைக்கிராமம். இந்தக் கிராமத்தில் மேலூர், கீழூர் என இரண்டு பகுதிகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வாழ்ந்து வரும் மக்கள் பலரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்தமாக சுமார் 1500 பேர் வசித்துவருகின்றனர்.

 Chief Minister Stalin has opened a new shop in Jarugumalai village, which has been without a fair price shop for 40 years

மலையிலிருந்து 14 கிலோமீட்டர் கீழே இறங்கிவந்துதான் அவர்களின் அன்றாட தேவைக்கான பொருட்களை வாங்கி செல்ல வேண்டும்.

ஆகவே, இந்த மக்கள் தங்கள் மலைக்கிராமத்தில் தங்களுக்கு என்று ஒரு நியாயவிலைக்கடை தேவை என மனு மேல் மனு போட்டு அரசுக்குக் கோரிக்கை வைத்துவந்தனர்.

ஆனால், கடந்த 40 வருடங்களாக அவர்களின் குரல் அரசின் காதுக்குக் கேட்கவே இல்லை. இவர்களின் கோரிக்கையும் நிறைவேறவே இல்லை.

 Chief Minister Stalin has opened a new shop in Jarugumalai village, which has been without a fair price shop for 40 years

இந்த ஜருகுமலையில் வசிக்கும் இவர்கள் தங்களின் வீட்டுத் தேவைக்காக வாங்கி வரும் அரிசி, பருப்பு என எந்த மளிகைப் பொருட்களையும் மலை அடிவாரத்தில் உள்ள ரேஷன் கடையில் வாங்கி, தலைச் சுமையாகவே வைத்து இந்த மலை மீது தூக்கிவர வேண்டும். பல காலமாக இப்படித்தான் நடந்துவந்துள்ளது.

அப்படித் தூக்கி வருகின்ற பலரும் பெண்கள். அதிலும் வயதானவர்கள் என்பது வேதனையிலும் வேதனை. நம்மிடம் பேசிய பல பாட்டிகள் இதனால் ஏற்பட்ட உடல் பிரச்சினைகளைக் கண்ணீர் கதையாகப் பேசியதை நம்மால் கேட்கவே முடியவில்லை. அவ்வளவு துயரக் கதைகள்.

இங்கு காலகாலமாக வசித்துவரும் பெரியவர்களிடம் பேசினால், அரிசி, பருப்புக்கு மட்டும் இல்லை. யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் படுத்தப் படுகையாகிவிட்டால், கட்டிலில் வைத்து நோயாளியை அடிவாரம் வரை கொண்டுபோவோம். இதுதான் தலைமுறை தலைமுறையாக நடத்துவந்த நடைமுறை என்கிறார்கள்.

 Chief Minister Stalin has opened a new shop in Jarugumalai village, which has been without a fair price shop for 40 years

இந்த மலைக்கு அந்தக் காலத்தில் சாலை வசதியும் சரியாக இல்லை. மண் சாலைதான் என்பதால் காலையில் அடிவாரத்திற்குச் சென்றால், பொருளை வாங்கிக் கொண்டு நடந்தே மலைக்குத் திரும்ப மாலை ஆகிவிடும் என்றும் அவர்கள் சொன்னார்கள்.

அதுவும் 25 கிலோ மூட்டை அரிசியைத் தலைச்சுமையாக 14 கிலோமீட்டர் தூரம் தூக்கிக்கொண்டு மலையில் மேல்நோக்கி நடந்துவருவதற்கு உயிர் போய் உயிர் வந்துவிடும் என்கிறார்கள் பல மூதாட்டிகள்.

 Chief Minister Stalin has opened a new shop in Jarugumalai village, which has been without a fair price shop for 40 years

"நாங்கள் முதலமைச்சருக்கு மனு போட்டு இருந்தோம். எங்களால் மலை அடிவாரம் வரை சென்று பொருட்களைக் கொண்டுவர முடியவில்லை. ஆகவே நீங்கள் எங்களுக்கு ஒரு கடையைத் திறந்து தரவேண்டும் என்று கேட்டு இருந்தோம். அதை இப்போது முதல்வர் ஸ்டாலின் செய்து கொடுத்துள்ளார்.

அரிசி, பருப்பு, கோதுமை, சோப்பு என எல்லா பொருட்களையும் தருகிறார்கள். எந்தநேரமும் வாங்கிக் கொள்கிறோம். வீட்டுக்குப் பக்கத்திலேயே உள்ளது. இப்போது கஷ்டம் தெரியவில்லை. எங்களுக்கு இப்போது மறு ஜென்மமே எடுத்த மாதிரி இருக்கிறது" என்கிறார் ஒரு நடுத்தர வயது பெண்மணி

இந்தக் கிராமத்திற்கு புதிய நியாயவிலைக்கடை வந்துள்ளது குறித்து நியாய விலைக்கடை விற்பனையாளர் வெங்கடாசலம், "கடந்த 40 வருடங்களாக இந்தக் கிராமத்திற்கு என்று நியாயவிலைக்கடை இல்லாமல் இந்த மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்தனர்.

அந்தக் குறையை முதலமைச்சர் ஸ்டாலின் சரி செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் அவரே இந்தக் கடையைத் திறந்துவைத்துள்ளார்" என்கிறார்

 Chief Minister Stalin has opened a new shop in Jarugumalai village, which has been without a fair price shop for 40 years

இத்தனைக் காலம் நியாயவிலைக்கடை கடைதானே? என்று அரசு அலட்சியமாக இருந்து விட்டது. அதற்குள் இவ்வளவு கண்ணீர் கதைகள் உள்ளன என்பதை உணர்ந்து உரிய நடவடிக்கையை எடுத்துள்ளார் ஸ்டாலின்.

கடந்த 40 ஆண்டுகளாக எந்த அரசும் எடுக்காத மின்னல் வேக நடவடிக்கை இது.

 Chief Minister Stalin has opened a new shop in Jarugumalai village, which has been without a fair price shop for 40 years
 Chief Minister Stalin has opened a new shop in Jarugumalai village, which has been without a fair price shop for 40 years
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+