சி.ஏ.ஏ.வை கைவிட மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றே கூறியுள்ளோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சேலம்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை (சி.ஏ.ஏ) கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பதைத்தான் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ராஜ்யசபாவில் ஆதரித்து வாக்களித்தது அதிமுக. ராஜ்யசபாவில் அதிமுக ஆதரிக்காமல் இருந்திருந்தால் இந்த மசோதா நிறைவேறி இருக்காது.

மேலும் நாடு முழுவதும் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சி.ஏ.ஏ.வால் தமிழகத்தில் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என கோபமாக கேள்வி கேட்டிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சி.ஏ.ஏ.வை கைவிட மத்திய அரசை வலியுறுத்துவோம் என கூறியிருந்தார். ஏற்கனவே சி.ஏ.ஏ.வை மத்திய அரசு ரத்து செய்யாது என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி கூறியிருந்தார்.
இதனிடையே எடப்பாடி தொகுதியில் வேட்பு மனுவை முதல்வர் பழனிசாமி இன்று தாக்கல் செய்தார். அப்போது சி.ஏ.ஏ. குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசை வலியுறுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம் என்று மட்டும் பதிலளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications