எந்த ஜாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ.. அதில் பிறந்த நான் உயர்கல்வி அமைச்சர்! கண்ணீருடன் கோவி செழியன்
சேலம்: எந்த ஜாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ, அந்த ஜாதியில் பிறந்த எனக்கு உயர்கல்வித் துறை வழங்கியவர் முதல்வர் ஸ்டாலின் என்று அமைச்சர் கோவி செழியன் கண்ணீர்விட்டு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எல்லோருக்கும் எல்லாம் என்பது வெறும் வாய் வார்த்தை அல்ல என்று கூறிய கோவி செழியன், புதிதாக கட்சி தொடங்குபவர்கள் ஸ்டாலினிடம் பாடம் கற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதம் முழுவதும் "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பெயரில் திமுக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் சேலம் மாவட்டம் தலைவாசலில் திமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. ராஜ்ய சபா எம்பி சிவலிங்கம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் பங்கேற்றார்.

இதில் அமைச்சர் கோவி செழியன் பேசுகையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், 3 முறை முதல்வராகவும் இருந்த ஓபிஎஸ், உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர் காமராசர், அண்ணா உள்ளிட்டோர் தேர்தலில் தோல்வி அடைந்த வரலாறு உண்டு. எனக்கு எதிரி இல்லை என்று கூறிய ஜெயலலிதா கூட பர்கூரில் தோல்வி அடைந்தார்.
ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி அத்தனை தேர்தல்களிலும் வென்றார். ஸ்டாலினுக்கு ராசி சரியில்லை.. கட்டம் சரியில்லை என்றார்கள்.. கருணாநிதி காலத்தில் கூட தேர்தலில் இருக்கும் கூட்டணி, மறுதேர்தலில் மாறிவிடும்.. ஆனால் ஸ்டாலின் கூட்டணியை தக்க வைத்து அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று வருகிறார்.
கட்சி தொடங்குபவர்.. ஸ்டாலினிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் ஓலை குடிசையில் பிறந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான், கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய 3 தேர்தலில் திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றேன்.. திமுக ஆட்சிக்கு வந்த போது, டெல்டா மாவட்டத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்று இருந்தோம்.
எனக்கு அரசு தலைமை கொறடா பதவி வழங்கப்பட்டது. முதலாளிகளும், மிட்டா மிராசுதாரர்களும் இருக்கும் தஞ்சை மாவட்டத்தில் ஒரு தொண்டனுக்கு தேசிய கொடியையும், தேசிய சின்னத்தையும் வழங்கி பவனி வர வைத்த இயக்கம் திமுக. சுமார் மூன்றரை ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தேன்.. பின் 4 பேருக்கு புதிதாக அமைச்சர் பதவி வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது..
சிலரை அமைச்சரைவையில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயம்.. அப்போது புதிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட ஒவ்வொரு பெயராக அறிவிக்கப்பட்ட போது, 4வது பெயராக எனது பெயரும் வந்தது. அமைச்சரவைக்கு புதியவன் தானே என்று ஏதோ ஒரு துறை ஒதுக்கீடு செய்யவில்லை. அப்படி காத்திருந்த நேரத்தில், எந்த ஜாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ.. அந்த ஜாதியில் பிறந்த எனக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக்கினார்.
அப்போது உணர்ச்சி மிகுதியில் அவர் தளுதளுத்த குரலில் பேசிக் கொண்டே கண்ணீர் சிந்தினார். தொடர்ந்து, அனைவருக்கும் அனைத்தும், எல்லோருக்கும் எல்லாம் என்பது வாய் வார்த்தை அல்ல.. கற்றலும் கற்பித்தலும் ஐயர், ஐயங்கர், சர்மா, சாஸ்திரியின் தொழில் என்று மனுதர்மம் எழுதி வைத்த சட்டம்..
அண்ணல் அம்பேத்கரின் கொள்கையை வீதியில் ஒலிக்க வைத்த பெரியாரின் உழைப்பு, அண்ணாவின் லட்சியம் கருணாநிதி உருவாக்கிய சமுதாய மாற்றம். அதன் வழியில் எளியவனான எனக்கு ஸ்டாலின் உயர்கல்வித்துறையை அளித்திருக்கிறார். இது அம்பேத்கர் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.
-
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications