மக்களுக்கு நல்லது செய்யவே எனக்கு நேரம் பத்தவில்லை! பதில் சொல்லி நேரத்தைவீணடிக்கமாட்டேன் -ஸ்டாலின்
சேலம்: தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்யவே தனக்கு நேரம் பத்தவில்லை என்றும் இதில் வெட்டிப்புகார்களுக்கு பதிலளித்து தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், தாம் தன்னுடைய இலக்கை நோக்கி நடந்து கொண்டிருப்பதாகவும் அண்ணா கூறியதை போல் வாழ்க வசவாளர்கள் என்பதையே தானும் கூற விரும்புவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஓராண்டு சாதனை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற தமிழக அரசின் ஓராண்டு சாதனைவிளக்கப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார். மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டம் தொடங்கும் என
எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் முன்கூட்டியே கூட்டம் தொடங்கியது. அதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,தமிழக அரசு இதுவரை என்னவெல்லாம் மக்களுக்கு செய்திருக்கிறது என்பதை பட்டியலிட்டார்.

நேரம் போதவில்லை
மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்யவே தனக்கு நேரம் பத்தவில்லைஎன்றும் இதில் வெட்டிப்புகார்களுக்கு பதிலளித்து தனது நேரத்தை வீணடிக்கவிரும்பவில்லை எனவும் கூறினார். திமுக ஆட்சி அமைந்தவுடன் தாம் தொடங்கியமுதல் பணி பாசன கால்வாய்களை தூர் வாரியது தான் எனக் கூறினார். பல்வேறு
மாநிலங்களிலும் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டுமே பணக்கம் குறைந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

முதல்வர் மாவட்டம்
கடந்த அதிமுக ஆட்சியில் தாம் சேலம் வருகை தந்த போது, முதலமைச்சராக இருந்தஎடப்பாடி பழனிசாமியின் மாவட்டம் என்பதால் பெரியளவில் இங்கு நம்மிடம் மக்கள்புகார் அளிக்கமாட்டார்கள் என தாம் நினைத்ததாகவும், ஆனால் வந்த பிறகு தான்தெரிந்தது இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக தன்னிடம் மக்கள் எடப்பாடிபழனிசாமியை பற்றி புகார் கூறினார்கள் எனவும் கூறினார். அந்தளவு சொந்தமாவட்டத்துக்கு மட்டுமல்ல சொந்த சொகுதியான எடப்பாடிக்கும் அவர் எதுவும்
செய்ய வில்லை என விமர்சித்தார்.

234 தொகுதிகள்
ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொகுதி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொகுதிஎன்று வேறுபட்டு பார்க்காமல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் தனதுதொகுதியாக பார்ப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். திமுக இன்று இந்தளவுக்குஅதிகாரமிக்க இடத்தில் இருப்பதற்கும் யாராலும் வீழ்த்த முடியாத சக்தியாகதிகழ்வதற்கும் காரணமே தொண்டர்களும், நிர்வாகிகளும் தான் என ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்தார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications