"புஷ்பா புருஷன்".. சிரிச்சு சிரிச்சு பேசினாளே.. சொல்ல சொல்ல கேட்கலியே.. நடுத்தெருவில் கதறிய நபர்

மனைவியின் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டி கொன்ற நபர் கைதானார்

Subscribe to Oneindia Tamil

சேலம்: 3 நாட்களுக்கு பிறகு சேலம் கொலையாளியை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துவிட்டார்கள்.. அவர்களின் பரபரப்பான வாக்குமூலமும் தற்போது வெளியாகி உள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காடு நார்த்தஞ்சேடு மலைக்கிராமம் அருகேயுள்ளது கும்பிபாடி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சிவக்குமார்.. 40 வயதாகிறது.. இவர் ஒரு காய்கறி வியாபாரி.

இவருக்கு அதே பகுதியை சேர்ந்த புஷ்பா என்பவருடன் தவறான உறவு இருந்துள்ளது.. புஷ்பாவுக்கு திருமணமாகிவிட்டது.. கணவர் பெயர் தங்கராஜ்.. புஷ்பாவும், சிவக்குமாரும் வேலைக்கு சென்ற இடத்தில் அறிமுகமாகி உள்ளனர்..

மாறிய டிராக்

மாறிய டிராக்

அப்படியே கள்ளக்காதலாக அந்த பழக்கம் மாறிவிட்டமது.. இதனால், இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து, உல்லாசமாகவும் இருந்து வந்ததாக தெரிகிறது.. இந்த விஷயம். தங்கராஜ் குடும்பத்துக்கும் தெரிந்துவிட்டது.. சிவக்குமார் குடும்பத்துக்கும் தெரிந்துவிட்டது.. இதனால் புஷ்பாவை அவரது குடும்பத்தினர் கண்டபடி திட்டி உள்ளனர்.. இனிமேல் சிவக்குமாருடன் பேசக்கூடாது என்றும் கண்டிஷன் போட்டுள்ளனர்.. ஆனாலும் யார் பேச்சையுமே இந்த கள்ளஜோடி காதில் வாங்கவில்லை. தொடர்ந்து ஊரை சுற்றி கும்மாளம் போட்டு வந்துள்ளனர்.

 ரத்த வெள்ளம்

ரத்த வெள்ளம்

இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு, தன்னுடைய வீட்டின் அருகே சிவக்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தங்கராஜ், அவரது அப்பா மாணிக்கம் ஆகியோர், சிவக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரும்பு கம்பியால் சிவக்குமாரையும் பலமாக தாக்கியிருக்கிறார்கள்.. இதில் சுருண்டு விழுந்தார் சிவக்குமார். .அப்போதும் ஆத்திரம் தீராத தங்கராஜ், கத்தியாலேயே சிவக்குமாரை வெட்டியுள்ளார்.. ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த சிவக்குமாரை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை..

எஸ்கேப்

எஸ்கேப்

சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்துவிட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.. ஆனால், அதற்குள் தங்கராஜ், மாணிக்கம் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.. இத்தனை நாளும் அவர்களை வலிவீசி தேடி வந்தநிலையில், இப்போதுதான் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் தங்கராஜ் அளித்த பரபரப்பு வாக்குமூலம்தான் இது:

கொக்கரிப்பு

கொக்கரிப்பு

என் மனைவி புஷ்பாவுக்கும், சிவக்குமாருக்கும் ஒரு வருடம் முன்பு பழக்கம் ஏற்பட்டது.. ஆரம்பத்தில் சாதாரணமாக சிரித்து பேசினார்கள்.. ஒருகட்டத்தில் தனிமையில் 2 பேருமே இருந்ததை நான் கண்ணாலேயே பார்த்துவிட்டேன்.. அதனால், அவர்களின் கள்ளத்தொடர்பை அறிந்து, புஷ்பாவை நான் கண்டித்தேன்... புஷ்பாவும் என் பேச்சை கேட்கும் மனநிலைமைக்கு வந்தார்.. ஆனால், சிவக்குமார்தான், புஷ்பாவின் தொடர்பை கைவிட மறுத்தார்.. புஷ்பாவுக்கு டார்ச்சரும் தந்து வந்தார்.. அதனால் நானும், என் அப்பாவும் சிவக்குமாரை கண்டிப்பதற்காகத்தான் அன்று அவர் வீட்டுக்கு சென்றோம்..

வீச்சரிவாள்

வீச்சரிவாள்

தெருவில் சிவக்குமார் நின்று கொண்டிருந்தார்.. அவரிடம், புஷ்பாவுடனான கள்ளத்தொடர்பை கைவிட சொன்னேன்... ஆனால், அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். அந்த ஆத்திரத்தில்தான், கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தலையில் அடித்தேன். கத்தியாலும் வெட்டினோம்.. அவர் படுகாயமடைந்து கீழே விழுந்ததால் அங்கிருந்து தப்பிவிட்டோம்.. சிவக்குமார் மட்டும், புஷ்பாவை விட்டு சென்றிருந்தால், இந்த அளவுக்கு விஷயம் போயிருக்காது" என்றார். இப்போது அப்பாவும் மகனும், சேலம் ஜெயிலில் உள்ளனர். தொடர் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+