Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அசிங்கம்".. மைனர் பெண்ணின் கன்னத்தை கிள்ளிய பூசாரி.. அதிர்ந்த பெற்றோர்.. அதிகாரிகள் விசாரணை ஆரம்பம்

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த பூசாரியிடம் விசாரணையை நடத்த போகிறார்களாம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் கோயிலில் நடந்த சம்பவம் குறித்து, இந்து அறநிலையத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.. இதையடுத்து, சேலம் போலீசாரும் அது தொடர்பான விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

சமீப காலமாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்தபடியே இருந்து வருகின்றன.. தமிழக அரசும் பெண் பிள்ளைகளை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. போலீசாரும் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர்..
சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து போக்சோவில் அடைத்தாலும், இந்த குற்ற செயல்களின் எண்ணிக்கைகள் குறையவே இல்லை.. சில சமயம் கோயிலுக்குள்ளும் இதுபோன்ற அட்டகாசங்கள் நடந்துவிடுகின்றன. சிலசமயம், பூசாரிகளே இப்படியான குற்றங்களை செய்வது வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

NCMEC சைபர் டிப்லைன்

NCMEC சைபர் டிப்லைன்

இப்படித்தான், சில மாதங்களுக்கு முன்பு, ஒரு சாமியார் சிக்கினார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன்.. இவருக்கு பாலாஜி என்ற இன்னொரு பெயர் உண்டு. இந்த பூசாரிக்கு 50 வயதாகிறது.. இன்னும் கல்யாணமாகவில்லை.. வெங்கிட்டாபுரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக பணி செய்து வருகிறார்... பூஜை நேரம் தவிர, நிறைய நேரம் ஃபேஸ்புக்கிலேயே இருப்பாராம்.. அதுகூட போலியான அக்கவுண்ட் வைத்துள்ளார்.. அதில் ஆபாச வீடியோவை மட்டும்தான் அப்லோடு செய்வாராம்.. அதிலும் வெறும் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை மட்டுமே தேடிபிடித்து பதிவிட்டு வந்துள்ளார்.

IP அட்ரஸ்

IP அட்ரஸ்

இதுகுறித்து NCMEC சைபர் டிப்லைன் என்ற பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் புகார் தரவும், உடுமலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலாஜி பயன்படுத்திய செல்போன் நம்பர் மற்றும் ஐ பி (IP address) அட்ரஸ் வைத்து அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து, போக்சோவில் கைதும் செய்யப்பட்டார். இதோ இப்போதுகூட சேலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. சேலம் நகரில், சுகவனேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது... எனவே, இங்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காக வந்து செல்வார்கள்..

கன்னத்தை கிள்ளி

கன்னத்தை கிள்ளி

இந்த கோவிலில் அர்ச்சகர் ஒருவரும், அவருடைய பொறுப்பில் 10-க்கும் மேற்பட்ட பதிலி அர்ச்சகர்களும் பூஜை செய்து வருகிறார்கள்.. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை 4 மணி அளவில், சுமார் 15 வயதுடைய சுடிதார் அணிந்த பெண் ஒருவர் வந்திருக்கிறார்.. கோயிலுக்குள் நந்திகேஸ்வரர் சிலை அருகே வந்தபோது, அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர், சிறுமியின் கன்னத்தைக் கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார்.. அந்த பெண்ணின் அருகில் இருந்த பெற்றோர்கள், இதைப்பார்த்து அதிர்ந்து போய் சத்தம் போட்டனர்.

அசிங்கம்

அசிங்கம்

அப்போது, அங்கிருந்த திருக்கோவில் பாதுகாப்பு உதவி அலுவலர் ஒருவர், "இது சம்பந்தமாக புகார் கொடுத்தால் உங்கள் பெண்ணுக்கு தான் அவமானம் நேரிடும்" என்று மிரட்டி உள்ளதாக தெரிகிறது.. அதனால், அந்த பெற்றோர் பயந்துகொண்டு, இதை பற்றி வாய்திறக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.. எனினும், இது சம்பந்தப்பட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் பரவியதுடன், பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.. அத்துடன், இந்த வீடியோ, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் பார்வைக்கும் சென்றதால், உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.. அதேபோல, காவல்துறை தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறதாம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+