திமுக நிர்வாகி சுட்டுக்கொலை.. கல்வராயன் மலைப்பகுதியில் கேட்ட சத்தம்.. போலீசார் தீவிர விசாரணை
சேலம்: சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கருமந்துறை பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளரும், விவசாயியுமான ராஜேந்திரன் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே உள்ளது கரிய கோவில். இங்குள்ள கிரான்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (45) விவசாயி. கிரான்காடு திமுக கிளை செயலாளராக உள்ளார். இவருக்கும் இவரது உறவினர்கள் ராஜமாணிக்கம் மற்றும் பழனிசாமி ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்த நிலையில்,இவர்களது சண்டையை அவ்வப்போது அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வந்துள்ளனர். நேற்று நள்ளிரவு ராஜேந்திரன் வீட்டு அருகே படுத்திருந்தார். அப்போது ராஜேந்திரனை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் இறந்துவிட்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ராஜேந்திரனின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வு செய்ய அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத் தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதில் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பதை அறிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக பிரமுகர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ்












Click it and Unblock the Notifications