காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் நாடகம்! முதல்வர் ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
சேலம்: காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகம் நடத்துவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் கோரணம்பட்டியில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இந்த விமர்சனத்தை முன் வைத்தார்.
காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி முக்கியமாக உள்ள நிலையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடியை விவசாயிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டது என்றும், 2018 பிப்ரவரி 16 ஆம் நாளிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர அட்டவணையின்படி, நீர் சேமிப்பு மற்றும் பிலிகுண்டுலுவில் அடையப்பட வேண்டிய நீரோட்டத்தைக் கருத்தில் கொண்டு இது செய்யப்பட்டது என்றும் மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில், 2 அணைகளில் இருந்தும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை என்றும், இதனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருவதாகவும், தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும் என்றும் தெரிவித்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடி, மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே நம்பியுள்ளதாக தனது கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சரா காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவார் என்றும் தண்ணீர் திறக்க வேண்டிய இடத்தில் கர்நாடக அரசும் , கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமாரும் தான் இருக்கிறார்கள் என்றும் அவர்களிடத்தில் பேசுவதை விட்டுவிட்டு ஸ்டாலின் நாடகம் நடத்துவதாக எடப்பாடி பழனிசாமி சாடியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications