தீயசக்தி எடப்பாடி! பல ரகசியங்கள் இருக்கு.. பார்ட் பார்ட்டா வெளியிட போறேன்! பகீர் கிளப்பும் புகழேந்தி
சேலம்: எடப்பாடி பழனிசாமி குறித்து இன்னும் பல ரகசியங்கள் வெளியிடப்படும் என ஓ.பி.எஸ். ஆதரவாளரும், அதிமுக முன்னாள் நிர்வாகியுமான புகழேந்தி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, இன்றுமுதல் தீய சக்தி பழனிசாமி என அழைக்கப்படுவார் என கடுமையாக விமர்சித்தார்.
ஓ.பி.எஸ். ஆதரவாளரான முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி, எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில், தற்போது, எடப்பாடி பழனிசாமிக்கு, தீய சக்தி பழனிசாமி என பட்டம் வழங்கியுள்ளார் புகழேந்தி.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகியும், ஓ.பி.எஸ். ஆதரவாளருமான புகழேந்தி, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களே எடப்பாடி பழனிசாமியை யாரும் வரவேற்கவில்லை என விமர்சித்தார்.

புகழேந்தி
அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், செம்மலை போன்ற அண்ணன்கள், எடப்பாடி பழனிசாமி பின்னால் நின்று எப்படி வேடிக்கை பார்க்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. செங்கோட்டையன் வேறு, தற்போது ஜாதிப் பற்றி பேச ஆரம்பித்துள்ளார் என குறிப்பிட்டார். இந்த கொங்கு மண்டலத்தில் வாழ்ந்த சுதந்திர போராட்ட தியாகியான தீரன் சின்னமலை, தூக்கு கயிறை நீ தொடாதே என்று சொல்லி, தன்னுடைய கழுத்தில் அவரே மாட்டிக்கொண்டு வரலாறு படைத்தார்.

எடப்பாடி பழனிசாமி
தியாகி தீரன் சின்னமலையின் பரம்பரையைச் சேர்ந்தவர்களே, எடப்பாடி பழனிசாமியை வரவேற்கவில்லை. கொங்கு சமுதாயத்தைச் சேந்தவராக எடப்பாடி பழனிசாமி இருக்க முடியாது. ஜாதிப் பெயரை சொல்லி அரசியல் செய்கிறீர்களா? எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் என்றைக்காவது ஜாதியை பற்றி பேசி உள்ளார்களா? என புகழேந்தி கேள்வி எழுப்பினார்.

துரோக செயல்கள்
எடப்பாடி பழனிசாமியின் பின்புறமாக யார் யார் உள்ளார்கள் என்பதும், யார் சொல்லி இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதும் வெளியில் வரும். அவரைப் பற்றிய பல ரகசியம் உள்ளது. ஜெயலலிதா சிறையில் இருந்தபோது என்னென்ன துரோக செயல்கள் செய்தீர்கள் என்று அனைத்து உண்மைகளையும் பகுதி இரண்டாக வெளியிடுவேன்.

மீண்டும் போட்டி
எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால், தற்போது உள்ள எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடத் தயாரா? நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். யார் ஜெயிப்போம் என்று பிறகு தெரியும் என புகழேந்தி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி என்று அழைக்கப்படும இந்த பழனிசாமி, எதிரியாக கருதி, அரசியல் ரீதியாக இன்று முதல் தீயசக்தி பழனிசாமி என்று அழைக்கப்படுவார் என்று புதிய பட்டத்தை வெளியிட்டு, அதற்கான துண்டு பிரசுரத்தையும் புகழேந்தி வெளியிட்டார்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications