எடப்பாடி தவெக வேட்பாளர் திடீர் மாயம்.. இபிஎஸ்ஸை எதிர்த்து களமிறங்கியவர் எங்கே? பெரும் பரபரப்பு
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அருண்குமார் போட்டியிடும் நிலையில் வேட்புமனு பரிசீலனை நாளான இன்று திடீரென்று மாயமாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியாகும். இங்கு முதல் முறையாக கடந்த 1989ம் ஆண்டு முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 1991ல் வென்றார். 1996ல் தோற்ற எடப்பாடி பழனிச்சாமி 2006ல் தோல்வியடைந்தார்.
அதன்பிறகு 2011, 2016, 2021 என 3 சட்டசபை தேர்தல்களிலும் தொடர்ந்து அவர் வெற்றி பெற்றார். தற்போது 8 வது முறையாக எடப்பாடி பழனிச்சாமி, எடப்பாடி தொகுதியில் நேற்று மனுத்தாக்கல் செய்தார்.
நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இந்த தொகுதியில் மொத்தம் 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடந்தது. எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு ஏற்கப்பட்டது.
தவெக வேட்பாளர்
எடப்பாடியில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. இதையடுத்து தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வட்டாச்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். இந்த தொகுதியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அருண்குமார் என்பவர் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். அவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
தவெக வேட்பாளர் மாயம்
வட்டாச்சியர் அலுவலகத்துக்குள் சென்ற தவெக வேட்பாளர் அருண் குமார் திடீரென்று மாயமானார். அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. அவரை பல இடங்களிலும் தவெகவினர் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. செல்போனிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தவெகவினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? என்று அங்கிருந்தவர்கள் பேச தொடங்கினர். இதனால் தவெக வேட்பாளர் எங்கே? என்று கேட்டு கட்சியினர் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் வந்து அவர்களை சமாதானம் செய்து வேட்பாளர் அருண் குமாரை கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக வேட்பாளர் மனு நிறுத்தி வைப்பு
மேலும் இந்த எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளராக காசி என்பவர் களமிறங்கி உள்ளார். இவரது வேட்புமனு இன்று பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது அவரது வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது. வேட்புமனுவில் காசியின் கையெழுத்துகளில் வித்தியாசம் இருப்பதாக கூறி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சேலம் திமுக எம்பி செல்வகணபதி வந்து திமுக வேட்பாளர் திமுக வேட்பாளர் காசியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். இதனால் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. இந்த தொகுதியில் மொத்தம் 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த சம்பவங்களால் எடப்பாடி வட்டாச்சியர் அலுவலகம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
-
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
வில்லிவாக்கத்திலிருந்து.. தி.நகருக்கு 1 மணி நேரத்தில் போக முடியாதாம்! பரப்புரையை ரத்து செய்த விஜய்! -
“ஜெயிலுக்கு போக இருந்த எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றிய 2 பேர்”.. ஓபிஎஸ் பேச்சு! -
வாங்கிய பட்டங்கள் போலியா? சிக்கலில் தவெக வேட்பாளர் சத்தியகுமார்? சர்ச்சையில் பொற்கொடி? -
வாயை விட்ட எடப்பாடி.. இறங்கி அடித்த ஸ்டாலின்.. விடாத அதிமுக.. காணாமல் போன தவெக விஜய்? -
தொடர்ந்து சொதப்பும் விஜய்.. அடுத்தடுத்து பரப்புரை ரத்து! காரணங்களை பாருங்க! -
சட்டமன்ற தேர்தல்: தமிழகம் மட்டும் இல்லை.. நாடே உற்று பார்க்கும் 27 விஐபி தொகுதிகள்.. லிஸ்ட் -
ஒற்றைத் தலைமை ரெடி! எம்ஜிஆர் - ஜெயலலிதா பலத்தை எட்டிவிட்டாரா எடப்பாடி? -
இலவச மழையில் புதுச்சேரி: யார் டாப்? விஜய்? ரங்கசாமி? காங்கிரஸ் பிழைக்குமா? -
ஆள் இல்லை.. களம் தெரியவில்லை.. விஜயும் கண்டுக்கல.. பிரச்சாரத்தில் சொதப்பும் தவெக.. பின்னணி -
“எனக்கா வயசாகிருச்சு? என்னுடன் நடை போட்டிக்கு எடப்பாடி தயாரா?”.. துரைமுருகன் சவால்! -
“எடப்பாடி பழனிசாமி இரட்டை விரலை காட்டுவது ஏன் தெரியுமா?” - உதயநிதி ஸ்டாலின் சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications