இப்படியும் நடக்குமா? சொந்த மகனையே நரபலி கொடுத்த பெற்றோர்? உடலை தோண்டியெடுத்து உடற்கூராய்வு
சேலம்: சேலம் ஏற்காட்டில் வடமாநிலத்தை சேர்ந்த 4 வயது குழந்தையின் மரணம் தொடர்பாக நரபலி என்று பரபரப்பு நிலவிய வந்த நிலையில், புதைத்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து அரசு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பக்னு சோய், பெலோ சோய். தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகனை ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, இரண்டு மகன்களுடன் ஏற்காடு காவேரிபீக் கிராமத்தில் உள்ள கராறா என்னும் தனியார் தோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி காலை 8:30 மணிக்கு தம்பதி இருவரும் வழக்கம் போல தோட்ட வேலைக்கு சென்றுள்ளார்கள். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த பக்னு சோயின் இரண்டு மகன்கள் அதே தோட்டத்தில் தங்கி வேலை செய்து வரும் சில தொழிலாளர்களின் குழந்தைகளுடன் சேர்ந்து 300 மீட்டர் தொலைவில் தோட்டத்தில் ஒரு இடத்தில் விளையாடியுள்ளனர்.

ஏற்காடு சிறுவன் மரணம்
அப்போது பக்னு சோய்யின் கடைசி மகனான 4 வயது லபாடா சோய், மின் கம்பத்தில் இருந்து அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் தொட்டதால் மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அதை தொடர்ந்து லபாடா சோய் இறந்தது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்காமல் பெற்றோர் இருவரும் இணைந்து அவரது உடலை வேலை செய்யும் இடத்தில் இருந்தது சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி மரணம்
இது குறித்து கிராம பொதுமக்கள் செம்மநத்தம் கிராம நிர்வாக அலுவலர் வைஷ்ணவிக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து அவர் சம்பவம் தொடர்பாக ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து ஏற்காடு காவல் ஆய்வாளர் வாசுகி, கிராம நிர்வாக அலுவலர் வைஷ்ணவி, வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி ஆகியோர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது தோட்ட மேலாளர் சுனிலிடம் குழந்தையின் மரணம் குறித்து காவல் துறைக்கு ஏன் தகவல் கொடுக்கவில்லை என்று கேட்டதற்கு அவர் சரியான முறையில் பதிலளிக்காமல் எனக்கு உடல்நிலை சரியில்லை அதனால் தகவல் கொடுக்கவில்லை என்று மழுப்பலாக பதிலளித்துள்ளார்.
நரபலி சந்தேகம்
தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் பக்னு சோய், பெலோ சோய் தம்பதியிடம் விசாரித்த போது அவர்களுக்கு தமிழ் தெரியாததால் காவல் துறையினருக்கு சரியான முறையில் விசாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அந்த குழந்தையின் மரணம் நரபலி என்று ஏற்காட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதையடுத்து ஏற்காடு காவல் துறையினர் குழந்தையின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து குழந்தை மின்சாரம் தாக்கி இறந்ததா? அல்லது இந்த மரணத்தில் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்ற கோணங்களில் விசாரணையை தொடங்கினர்.
மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு
மேலும் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யவும் திட்டமிட்டனர். இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவர் கோகுலரமணன் முன்னிலையில் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்தனர். குழந்தையின் உடல் உறுப்புகளில் சிலவற்றை ஆய்விற்காக எடுத்து சென்றனர். இதை தொடர்ந்து குழந்தையின் மரணம் குறித்து ஏற்காடு போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஏற்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications