"அதான் என் பையன் இல்லையே! நீ ஏன் தனியாக கிடந்து கஷ்டப்படுறே.. என் கூட வா"!.. மாமனாரின் வக்கிரபுத்தி!
சேலம்: வாழப்பாடி அருகே மகன் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் மருமகளை உல்லாசத்திற்கு மாமனார் அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் , வாழப்பாடி அருகேயுள்ள வேப்பிலைப்பட்டியை சேர்ந்தவர் 24 வயது பெண். தனது கணவர் வெங்கடேஸ்வரனுடன் வசித்து வருகிறார். இவர் ஒரு லாரி டிரைவர்.
இதனால் அடிக்கடி வெங்கடேஸ்வரன் வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிடுவார். இதனால் அந்த பெண்ணுக்கு துணையாக மாமனார் பச்சமுத்துவும் மாமியார் தனலட்சுமியும் இருந்துள்ளனர்.

மருமகள்
கடந்த 20 ஆம் தேதி வீட்டில் மருமகள் தனியாக இருந்த போது மாமனார் பச்சமுத்து அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதற்கு மருமகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மகள் போல் நினைக்காமல் என்னிடம் இப்படி தவறாக நடக்கலாமா என மருமகள் நியாயம் கேட்டுள்ளார்.

அடிக்கடி வெளியூர்
அதற்கு மாமனார், உன் கணவர்தான் அடிக்கடி வெளியூர் செல்கிறானே, அவன் இடத்தில் நான் இருந்து உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். இதனால் மருமகள் கோபமடைந்துள்ளார். மேலும் மாமனாரின் வக்கிர புத்தி குறித்து தனது கணவரிடமும் மாமியாரிடமும் முறையிட்டுள்ளார்.

தரக்குறைவாக பேசிய குடும்பம்
அவர்கள் தட்டி கேட்டு நமக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள் என நினைத்த அந்த மருமகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது கணவரையும் தந்தையையும் குறை கூறாமல் அந்த பெண்ணையே தரக்குறைவாக பேசியுள்ளனர். இதையடுத்து அந்த பெண் தனது தந்தைக்கு போன் செய்து விஷயத்தை கூறியுள்ளார்.

வழக்குப் பதிவு
மாப்பிள்ளை குடும்பத்தாரிடம் வந்து அவரும் தட்டி கேட்ட போது அவரையும் அசிங்கமாக பேசி அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து வேறு வழியில்லாமல் வாழப்பாடி காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். விசாரணையில் மருமகளை மூவரும் சேர்ந்து தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து பச்சமுத்து, தனலட்சுமி, வெங்கடேஸ்வரன் ஆகிய மூன்று பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications