சேலம் மேட்டூரில் பெண் தேர்தல் அதிகாரி திடீர் தற்கொலை.. பெரும் அதிர்ச்சி.. போலீஸ் விசாரணை
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூரில் பெண் தேர்தல் அதிகாரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 2ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற போகிறது. தமிழகத்தில் தான் முதற்கட்ட தேர்தல் நடைபெற போகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற போகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி நிறைவு பெற்றது. தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டுவிட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும்.

தேர்தல் பணிகளில் மாவட்ட ஆட்சியர், தாசில்தார், துணை தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் காவல் பணியிலும் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அரசு அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். அதன்பிறகு வழக்கமான பணிகளில் அதிகம் கவனம் செலுத்துவார்கள்..
இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக 37 வயதாகும் நர்மதா என்பவர் பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் மணிகண்டன் சபரி. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது..
கடந்த சில நாட்களுக்கு முன்பு நர்மதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் வீடு திரும்பியிருக்கிறார்,
இதனிடையே மன அழுத்தம் காரணமாக நர்மதா பாதிக்கப்பட்டு இருந்தாராம் மேலும் அன்று இரவு வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட நர்மதா நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை.. இதனிடையே நர்மதா நீண்ட நேரமாக வெளியே வராததால் குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அங்கு துணை தாசில்தார் நர்மதா தனது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் மேட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து நர்மதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications