கொங்கணாபுரம் ரோட்டில் என்ன நடக்கிறது.. ஒன்று திரண்டு வந்த ஆடுகள்.. குஷியில் இடைப்பாடி..!
கொங்கணாபுரம் சந்தையில் ஆடுகள் இன்று அமோக விற்பனையானது
சேலம்: கொங்கணாபுரம் சந்தையில் ஆடுகள் அமோகமாக விற்பனையானதால், வியாபாரிகள் படுமகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் சந்தை என்றாலே படுபேமஸ்.. வார வாரம், சனிக்கிழமை இந்த வாரச்சந்தை கூடுகிறது.
இந்த சந்தை ஆடு, கோழிகளுக்கு பிரசித்தி பெற்றது. என்றாலும், காய்கறிகள், இதர மளிகை சாமான்களும் விற்பனைக்கு குவிக்கப்படும்.

சேவல்கள்
இந்த சந்தைக்கு, சேலம் மட்டுமின்றி ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் கால்நடைகளை வியாபாரிகள் விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்... இந்த சந்தையில் அதிக எண்ணிக்கையில் சண்டை சேவல்களும் விற்பனைக்கு வரும்.. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநில வியாபாரிகள், அதிக சண்டை சேவல்களை வாங்கி செல்வார்கள்.. சண்டை சேவல்களை வாங்க வருபவர்கள், அதன் சண்டையிடும் திறனை பரிசோதித்துவிட்டு, அதற்கு பிறகுதான் விலைபேசி வாங்கி செல்வார்களாம்.

ஆட்டு மந்தைகள்
எனினும், ஆடுகள் விற்பனைதான் இந்த சந்தையில் அதிகம் நடக்கும்.. அதிலும், பொங்கல், தீபாவளி, பக்ரீத் பண்டிகைகள் வந்தால் போதும், சந்தை முழுவதும் ஆடுகள்தான் தென்படும்.. பெரிய ஆட்டுச் சந்தை என்பதால், அந்த வாரம் முழுவதுமே ஆடுகள் வரத்து அதிகமாக காணப்படும்.. பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை கொண்டு வந்துவிடுவார்கள்.. அதனால் ஆடு விற்பனை நடக்கும்போது மட்டும் அதிகாலையில் இருந்தே கூட்டம் இந்த சந்தையில் நிரம்பி வழியும்...

வார சந்தை
10 கிலோ எடையுள்ள ஆடு 5000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும். அதன்படி, சனிக்கிழமை வாரச்சந்தை என்பதால், இன்றும் களைகட்டியது.. எடப்பாடி, கொங்கணாபுரம், சின்னப்பம்பட்டி, சங்ககிரி, ஆட்டையாம்பட்டி உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் ஆடுகளைக் கொண்டுவந்து விற்பனை செய்தும் வளர்ப்பதற்காக ஆடுகளை வாங்கியும் செல்கின்றனர்..

கொங்கணாபுரம் சந்தை
கொங்கணாபுரம் வாரச் சந்தைக்கு சுமார் 5000 ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன... 5000 ஆடுகள் கொண்டு வந்திருந்த நிலையில் 3000 ஆடுகள் கடகடவென விற்பனையாகிவிட்டதாம்.. ஆடு ஒன்று, 1000 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனையானது.. எப்படியும் இன்று மட்டும் கொங்கணாபுரம் சந்தையில் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக சொல்கிறார்கள்..!
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications