Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டிலேயே இதுதான் முதல்முறை.. நெளிய வைத்த சேலம் "கேவலம்".. இந்த 2 பேர் யார்? சபாஷ் நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்ட நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பானது, ஒட்டுமொத்த தமிழகத்தையுமே திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. யார் இந்த 2 திருநங்கைகள்?

நாளுக்கு நாள் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து கொண்டே போகிறது.. வடமாநிலங்களில்தான் இப்படி ஒரு கொடுமைகள் நடந்து வருகிறதென்றால், நம்முடைய தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு துயரம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Happy news in Salem and For the first time in Tamil Nadu, Salem Court gave judgment to 2 transgenders

பிள்ளைகளுக்கு கல்வியை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, இதுபோன்ற புகார்களில் சிக்குவது வேதனையை தந்து வருகிறது.. பெண்களே சில சமயம் போக்சோ சட்டத்தில் கைதாவது அதைவிட அதிர்ச்சியை தந்து வருகிறது.

சிறுவன் யார்: சேலம் மாவட்டம் காக்காபாளையம் பகுதியை சேர்ந்தவன் அந்த சிறுவன்.. 16 வயதுதான் ஆகிறது.. அங்கிருக்கும் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறான்.. வாரத்துக்கு ஒருநாள், இந்த சிறுவனுக்கு ஓட்டலில் லீவு தருவார்கள். அந்த ஒரு நாள் லீவில், தன்னுடைய நண்பர்களுடன் விளையாடுவான் இந்த சிறுவன்.

இப்படித்தான் கடந்த 2022, ஜூலை மாதம், விளையாட போன சிறுவன், மிகுந்த சோர்வுடனும், களைப்புடனும் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.. அவனது கோலத்தையும், முகத்தையும் பார்த்ததுமே சிறுவனின் பெற்றோர்கள் பதறிப்போய் விட்டார்கள். இதனால் மகனிடம் என்ன நடந்தது என்று தீவிரமாக விசாரித்தார்கள். அப்போதுதான், சிறுவன் அழுதுகொண்டே நடந்ததை ஒன்றுவிடாமல் சொன்னான்.

பிரியாணி: விளையாட போனபோது, 2 திருநங்கைகள் வந்தார்களாம்.. நைசாக பேசினார்களாம்.. மட்டன் பிரியாணி வாங்கி தருகிறோம் என்று அவர்களது வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவிட்டார்கள் என்று கண்ணீர் மல்க சொன்னான். இதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இனிமேல் யார் கூப்பிட்டாலும் செல்லக்கூடாது, முன்பின் தெரியாதவர்களிடம் நின்று பேசக்கூடாது என்று மகனுக்கு அறிவுரை சொன்னார்கள்.

அதற்கு பிறகு சில நாள்கழித்து, மறுபடியும் அதேபோல சிறுவன் விளையாட சென்றிருக்கிறான். அப்போதும் அதே போல 2 திருநங்கைகள் வந்திருக்கிறார்கள்.. அதேபோல, சிறுவனை ஏமாற்றி அழைத்துச்சென்று 4 மணி நேரம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

காக்காபாளையம்: இதற்கு பிறகுதான், சிறுவனின் அம்மா போலீசுக்கு போய்விட்டார்.. காக்காபாளையம் போலீசில் இதுதொடர்பான புகார்களை தரவும், போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். இறுதியில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகளான கார்த்திக்(எ) காயத்ரி (26), முல்லை (25) ஆகியோரை கைது செய்தனர்..

பின்னர் இது தொடர்பான வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்திலும் நடந்து வந்தது.. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, திருநங்கைகளான காயத்ரி, முல்லை ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடியாக தீர்ப்பு சொல்லி உள்ளார்.. இவர்கள் 2 பேரையும் போலீசார் கோவை பெண்கள் சிறைக்கு கொண்டு சென்றனர்.

பாலியல் குற்றம்: சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் இதுவே முதன்முறையாகும்... இப்படிப்பட்ட தீர்ப்பானது, பெண்களுக்கும், பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களுக்கு ஒருவகையில் ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது.

ஆனாலும், பச்சிளம் குழந்தையாக இருந்தாலும்சரி, வயதான பாட்டியாக இருந்தாலும்சரி, அவர் ஒரு "பெண்ணா"க மட்டுமே இருந்தால் போதும் என்ற கேவலமான மனநிலைமைக்கு ஆளாகிவிடுகிறார்கள் இதுபோன்ற காமுகர்கள்.. இந்த வெறிபிடித்த மிருகங்களுக்கு வயதோ, உறவுமுறையோ எதுவுமே கண்ணுக்கு தெரிவதில்லை.. உலகமறியா சிறுவன், சிறுமிகளின் எதிர்காலத்தையே நாசமாக்குகிறோமே என்ற அச்சமும் இருப்பதில்லை.

தண்டனைகள்: போக்சோ சட்டங்கள் தற்போது நடைமுறையில் இருந்தாலும்கூட, போதுமான பலனை அது பெற்று தரவில்லை என்றே தெரிகிறது.. அதனால்தான், பாலியல் கொடுமைகள் இன்னமும் குறையாமலேயே உள்ளன.. போக்சோவில் கைதாவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றன.

எனவே, குழந்தைகள் மீது "கை" வைக்கவே நடுங்கும் அளவுக்கு, போக்சோவைவிட இன்னும் கொடுமையான சட்டங்களும், கடுமையான தண்டனைகளும் மட்டுமே இங்கு உடனடி தேவையாக இருக்கிறது...!!

துறைகள்: இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டியிருக்கிறது.. ஒருகாலத்தில் வீட்டை விட்டும், ஊரை விட்டும் துரத்தப்பட்ட திருநங்கைகள், இன்று அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள்.. தங்களது அயராத உழைப்பால், தங்கள் சமூகத்தையே, தவறான பார்வையில் இருந்து நீக்கி வரலாறு படைத்து கொண்டிருக்கிறார்கள்...

அவ்வளவு ஏன்? கடந்த 10 நாட்களுக்கு முன்புகூட, திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக சிந்து என்ற திருநங்கை, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக டிக்கெட் பரிசோதகராகியிருக்கிறார்.. ஆனால், இங்கே பாலியல் வழக்கில் திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் முதன்முறையாக உள்ளது.. இதை என்னவென்று சொல்வது?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+